நீதிபதிகள் ஜே.எம்.பாஞ்சால், எச்.எல்.கோகலே ஆகியோர் குறிப்பிட்டுள்ளனர். முதல் மனைவி இருப்பதை மறைத்து இன்னொரு திருமணம் செய்த போலீஸ் அதிகாரி தொடர்ந்த வழக்கில் நீதிபதிகள் வெளியிட்ட கருத்து அது.
இரண்டாவது திருமணம் சட்டப்படி செல்லாது என்கிற ஒரே காரணத்தால் இரண்டாவது மனைவி எந்த சட்டத்தின் கீழும் நிவாரணம் கோர முடியாது என்ற வாதம் கீழ்த்தரமானது எனக்கூறி அதை தகர்த்து தவிடுபொடி ஆக்கிய சுப்ரீம் கோர்ட், அரசியல் சாசனத்தின் 136வது ஷரத்து இந்தியாவின் உச்ச நீதிமன்றத்துக்கு வழங்கியுள்ள அதிகாரம் வேறு எந்த சட்டங்களுடனும் ஒப்பிட முடியாத அளவில் உயர்வானது என கோடிட்டு காட்டியுள்ளது.
‘ஐகோர்ட் தீர்ப்பை எதிர்த்து இரண்டாவது மனைவி அப்பீல் செய்யாத நிலையில், அவருக்கு சாதகமான ஓர் உத்தரவை சுப்ரீம் கோர்ட் பிறப்பிக்க முனைவது தேவையற்றது, தவறானது‘ என்று போலீஸ் அதிகாரியின் வழக்கறிஞர் எடுத்துவைத்த வாதத்தை நீதிபதிகள் முற்றிலுமாக நிராகரித்த நேரத்தில்தான் வானளாவிய அதிகாரம் வார்த்தை வடிவம் பெற்றது.
No comments:
Post a Comment