Monday, November 22, 2010

சிறந்த உதாரணம் தமிழகத்தில் உள்ள பள்ளர்கள் என்னும் தேவேந்திரகுல வேளாளர்கள். அவர்கள் நிலமிழந்து கீழே சென்றது சில நூற்றாண்டுகளுக்குள் நிகழ்ந்த விஷயம் என நிரூபிக்கப்பட்டிருக்கிறது

http://www.jeyamohan.in/?p=5256

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு வணக்கங்கள் பல

உங்களின் பசும்பொன் படித்தேன் எனது சொந்த ஊர் பரமக்குடி மற்றும் இந்த தேவர் ஜெயந்தி சில வருடங்களாக இம்மானுவேல் நினைவு தினம் சென்ற மாதம் நடந்தது.இம்மானுவேல் நினைவு தினம் எங்கள் ஊரில் சில வருடங்களாக நடக்கிறது .( செப் 11).

கடந்த செப் 11 அன்றும் பள்ளிகள் விடுமுறை மற்றும் நீங்கள் கடந்த தேவர் ஜெயந்தி அன்று பார்த்த அதே கடை அடைப்பு அதே பீதி மக்கள் மனதில்.உங்களுக்கு மேலும் ஒரு தகவல் இந்த வருடம் தேவர் ஜெயந்தி (oct 28,29,30) மூன்று நாள் பள்ளிகள் விடுமுறை.எங்கள் ஊரில் வாழும் மக்களின் மன நிலையை கொஞ்சம் நினைத்து பாருங்கள் அட, மக்களை விடுங்கள் எங்கள் ஊர் குழைந்தைகளுக்கு இந்த நான்கு நாட்கள் பதிலாக நான்கு சனிக்கிழமை அன்று அவர்களுக்கு பள்ளி செயல்படும் .





இவற்றை எல்லாம் நிறுத்த நான் மற்றும் பாதிக்கபட்டவர்களை திரட்டி உயர்நீதி மன்றத்தில் பொது நல வழக்கு போடும் அளவுக்கு எங்கள் மனம் கசந்து உள்ளது

இப்படிக்கு நண்பர்

சின்னப்பா



அன்புள்ள சின்னப்பா,

உங்கள் கடிதம் கண்டேன். பசும்பொன் சென்றது குறித்த என்னுடைய எண்ணங்களில் நான் சொல்ல விழைவதை மென்மையாகச் சொல்லியிருக்கிறேன் என்றே எண்ணுகிறேன். சமகால அரசியலை சுடச்சுட விமரிசனம் செய்வது மிக எளிது. அதைச்செய்ய ஏராளமானவர்கள் இருக்கிறார்கள். நீண்ட வரலாற்றுப்பக்கங்கள் வழியாக ஒட்டுமொத்தமாகப் பார்ப்பது அத்தனை எளிய விஷயமல்ல. அதை சொல்லிப்புரியவைப்பது கடினம். விளைவுகளைக் குறித்த புரிதலுடன் பொறுப்புடன் சொல்வது இன்னமும் கடினம். .

ஒற்றைவரியில் சாதி ஒழிப்பு பேசப்படும் காலகட்டம் கடந்த இருபது வருடங்களில் அபத்தமாக பின்னகர்ந்துவிட்டது. இன்று அத்தகைய குரல்கள் யதார்த்ததுடன் எந்தவகையான தொடர்பும் இல்லாமல் மேடையில் ஒலிக்கும் போலிக்குரல்களாக மட்டுமே உள்ளன. சாதியால் ஒடுக்கப்பட்ட மக்கள் கிளர்ந்தெழுந்து சாதியை ஒழிப்பது என்ற கனவே இன்று உண்மையில் எவரிடமும் இல்லை.

ஏனென்றால் சாதியடுக்குகளின் கீழ் கீழ் நிலைகளில் உள்ள மக்கள் அரசியலுக்கும் அதிகாரத்திற்கும் வரும்தோறும் அவர்கள் மேலும் மேலும் சாதியாக ஒருங்கிணைந்தவர்களாகவே இருக்கிறார்கள் என்பதும், அவர்களால் சாதியை ஒருபோதும் விடமுடியாது என்பதும், அவர்கள் அதிகாரம் வழியாக அரசியல் சமூக தளங்களில் சாதியடையாளம் மேலும் மேலும் வலுவடைந்தே வருகிறது என்பதும், நிரூபணமாகியபடியே இருக்கிறது.

சாதி போன்ற சமூக அமைப்புகள் வரலாற்றிந் அடித்தளத்தில் இருந்து தன்னிச்சையாக முளைத்துவந்தவை. அவற்றுக்கு நடைமுறைப்பயன் உள்ளவரை வெற்று இலட்சியவாதத்தால் அவற்றை ஒழித்துவிட முடியாது. இலட்சியவாதி தன்னை இலட்சியவாதியாக முன்வைக்க அந்த கோஷம் பயன்படுமே ஒழிய நடைமுறையில் ஒன்றும் நிகழாது.

ஒருகாலத்தில் சாதி என்ற அமைப்பை சற்றும் புரிந்துகொள்ளாமல் சில அன்னியரால் ‘ரூம்போட்டு யோசித்து’ உருவாக்கப்பட்ட சதி என்று நம்பிய சீர்திருத்தவாதிகள் இருந்தார்கள். அப்போதே சாதியின் தோற்றத்தையும் வளர்ச்சியையும் குறித்து ஆழமான ஆய்வுகளைச் செய்த ஆராய்ச்சியாளர்களும் இருந்தார்கள். எம்.என்.ராய், அம்பேத்கார், டி.டி.கோஸாம்பி போன்று பல தளங்களில் ஆராய்ச்சிகள் நிகழ்ந்திருக்கின்றன. அவற்றை ஒருங்கிணைத்து பொதுவிவாதத்துக்குக் கொண்டுவருவதற்கான அரசியல் செயல்பாடு இங்கே இருக்கவில்லை. மாறாக எளிய மேடை கூச்சல்களே போதும் என்ற முடிவுக்கு வந்தனர் நம் அரசியல்வாதிகள்.

சாதியமைப்பின் வேர்கள் நமது பழங்குடி மரபில் உள்ளன. இந்தியநிலப்பரப்பில் இருந்த பல்லாயிரம் பழங்குடிச் சமூகங்களே அடுத்த கட்டத்தில் சாதிகளாகப் பரிணாமம் கொண்டன. இந்தியப் பழங்குடிச் சமூகங்கள் நிலப்பிரபுத்துவ அமைப்புக்குள் கொண்டுவரப்பட்டதன் விளைவே சாதியமைப்பு. நிலப்பிரபுத்துவ அமைப்புக்குள் நிலமே ஏற்றதாழ்வை தீர்மானிக்கும் அளவுகோல். ஆகவே நில உடைமை சார்ந்து சாதிகள் மேலே கீழே என அமைக்கப்பட்டன. நிலம் இழந்த சாதிகள் கீழே செல்வதையும் நிலம் பெற்ற சாதிகள் மேலே வருவதையும் இந்திய வரலாற்றில் சாதாரணமாகக் காண்கிறோம். சிறந்த உதாரணம் தமிழகத்தில் உள்ள பள்ளர்கள் என்னும் தேவேந்திரகுல வேளாளர்கள். அவர்கள் நிலமிழந்து கீழே சென்றது சில நூற்றாண்டுகளுக்குள் நிகழ்ந்த விஷயம் என நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

சாதியமைப்பில் உள்ள அதிகார அடுக்கை உறுதியான ஆசாரமாக நிலைநிறுத்துவதற்கான கருத்தியல்கள் வைதீக மதத்தில் இருந்து எடுத்து விரிவாக்கம் செய்யப்பட்டன. இன்று நாம் பார்க்கும்போது ஏற்றத்தாழ்வை உருவாக்க அக்கருத்தியல்கள் உதவின என்று படும். ஆனால் அன்றைய நிலையில் பழங்குடிச்சமூகம் நிலப்பிரபுத்துவச் சமூகமாக ஆவதற்கான முற்போக்கான பங்களிப்பையே அவை ஆற்றின என்றே ஒரு மார்க்ஸிய ஆய்வாளர் கூறுவார். பழங்குடிச் சமூகங்களின் தீராத பரஸ்பர மோதல்களை இல்லாமலாக்கி உறுதியான கட்டுமானம் கொண்ட ஒற்றைச்சமூகமாக அதை ஆக்கவும் , யாருக்கு பலமிருக்கிறதோ அவனை பிறர் அங்கீகரிக்கச்செய்து அதன்வழியாக அரசுகளையும் பேரரசுகளையும் உருவாக்கவும் அந்தக் கருத்தியல் பயன்பட்டது.

அதன் பின்னர் வந்த பௌத்த ,சமண மதங்கள் அடுத்தகட்ட பணியை ஆற்றின. அவை நிலப்பிரபுத்துவ சமூக அமைப்புக்குள் சீரான ஒத்திசைவையும் சமரசத்தையும் உருவாக்க முயன்றன. அதன் மூலம் வணிகத்தை வளர்த்தன. அதன் பின் உருவான பக்தி காலகட்டத்தில் ஒருங்கிணைக்கப்பட்ட சைவ வைணவப் பெருமதங்கள் அனைத்து மக்களையும் ஒருங்கு திரட்டும் அமைப்புகளாக ஆகி மேலும் வலுவான பேரரசுகளுக்கு அடித்தளம் அமைத்தன.

ஆக, சாதி என்பது இந்த நாட்டில் உள்ள மக்களின் பழங்குடி வேர். அவர்களின் அடையாளமாக தொன்றுதொட்டு இருந்து வருவது. அந்த அடையாளங்கள் காலப்போக்கில் பலவகையான மாற்றங்களுக்கு உள்ளாகியிருக்கலாம் என்றாலும் அந்த வேர்ப்பிடிப்பு எப்போதுமே மாறியதில்லை. ஆகவே இன்றும் இந்தியாவின் எந்த ஒரு சாதியப்படிநிலையில் இருப்பவருக்கும் அவரது சுய அடையாளம் சாதியைச் சார்ந்தே உள்ளது. அவர் தன்னை வகுத்துக்கொள்வதே அதன் வழியாகத்தான்.

இந்தியாவில் சமானமான இயல்புள்ள சிறியசிறிய சாதிகள் இணைந்து பெரியசாதிகளாக ஆகும்போக்குதான் எப்போதும் காணக்கிடைக்கிறது. பெரியசாதிகள் ஒருபோதும் சிறிய சாதிகளாக பிரிவதில்லை. அதாவது மக்கள் சாதிகளாக பிரிக்கப்படவில்லை. சாதிகளாக தொகுக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த தொகுப்பு மூலமே அவர்கள் மக்கள்திரளாக ஆகி அதிகாரம் நோக்கி நகர்ந்து வந்துகொண்டிருக்கிறார்கள்.

உதாரணமாக மறவர்களில் உள்ள குலங்களான கொண்டையங்கோட்டையர்,செம்புநாட்டார்,ஆப்பநாட்டார் போன்றவர்கள் இன்றும்கூட பழக்கவழக்கம்,ஆசாரம் அனைத்திலும் தனிச்சாதிகளாகவே இருக்கிறார்கள். தங்கள் தனியடையாளத்தை அவர்கள் விடுவதேயில்லை. ஆனால் மறவர் என்ற பொது அடையாளத்துக்குள் அவர்கள் ஐந்து நூற்றாண்டுகளுக்கு முன்னர் வந்ததன் வழியாக அதிகாரத்தை நோக்கி நகர்ந்தார்கள். அதன்பின் வெள்ளையர் எடுத்த முதல் சாதிவாரி மக்கள்கணக்கெடுப்பில் தங்களை சமானமான பிறசாதியினருடன் இணைத்துக்கொண்டு முக்குலத்தோர் என அடையாளப்படுத்திக்கொண்டது வழியாக அடுத்தகட்ட ஜனநாயக அதிகாரம் நோக்கிச் சென்றார்கள்.

இதுதான் இங்கே எல்லா சாதிகளும் அதிகாரமும் சமூக இடமும் பெறும் வழியாக இருக்கிறது. ஆகவே சாதியை ‘ஒழிப்ப’தெல்லாம் சாத்தியமே அல்ல. கோடானுகோடி மக்களை அவர்களின் அடையாளத்தை விட்டுவிடும்படி கொள்கைப்பிரச்சாரம் செய்வதென்பது நடைமுறைச் சாத்தியமான ஒன்றல்ல. சாதிகள் தங்களைத் திரட்டிக்கொண்டு ஜனநாயக அதிகாரத்தை நோக்கிச் செல்லும் இன்றைய போட்டியை இயல்பான ஒன்றாக எடுத்துக்கொள்ளத்தான் வேண்டும்.

தனிப்பட்ட முறையில் நான் சாதியை நம்பாதவன். சாதியடையாளத்தை துறந்தே தனிவாழ்க்கையை அமைத்துக்கொண்டவன். ஆனால் இன்றைய சூழலில் சாதியமைப்பு வலுவாகவே நீடிக்கும் என்றே நினைக்கிறேன். நானறிந்தவரை தமிழில் சாதியைப் பற்றிச் சொல்லும்போதே பாய்ந்து சாதிக்கு எதிராக கர்ஜனைசெய்யும் எவருமே தனிவாழ்க்கையில் சாதியை விட்டு விலகாதவர்கள். சொல்லப்போனால் ஒருவர் சாதி ஒழிக என்று கூவினாலே அவர் சாதியவாதி என்றுதான் பொருள்.

இங்கே இன்று பிரபலமாக இருக்கும் இடதுசாரிக் கட்சிகள் திராவிடக்கட்சிகள் இரண்டுமே சாதியழிப்பை கொள்கையாகக் கொண்டவை. தமிழ்நாட்டு மேடைகளில் சாதியொழிப்பு பேசப்படாத நாளே இல்லை. அவர்களில் வெறும் ஒரு சதவீதம் பேர் சாதியை விட்டு விலகினாலே இங்கே பெரும் மாற்றம் நிகழ்ந்திருக்குமே?

ஆனால் சாதி அழியாததா? அழியப்படக்கூடாததா? இரண்டுக்குமே நான் ’அழியவேண்டியது, அழிக்கப்படகூடியது’ என்றே பதில்சொல்வேன். இன்றைய இந்திய சமூகம் வாலை நிலப்பிரபுத்துவத்திலும் தலையை முதலாளித்துவத்திலும் வைத்துக்கிடக்கிறது. நிலப்பிரபுத்துவ மதிப்பீடுகளும் முதலாளித்துவ வாழ்க்கைமுறையுமாக இரட்டை வாழ்க்கை வாழ்கிறது. அதிநவீன ஹ¥ண்டாய் காருக்கு திருஷ்டி பொம்மையை கட்டித்தொங்கவிடுபவர்கள் நாம். நாம் எதிர்காலத்தில் முழுமையாக நிலப்பிரபுத்துவத்தை முற்றிலும் விட்டுவிட்டு உயர்முதலாளித்துவ அமைப்புக்குள் செல்லும்போது சாதி இல்லாமலாகலாம். அதாவது வெறும் பெயர் அடையாளமாக நீடிக்கலாம். அது நெடுங்காலம் நிகழக்கூடிய ஒரு வளர்சிதைப்போக்கு. அது வரை அது அரசியல் மற்றும் சமூகக் குழுஅடையாளமாக, தனிமனிதனின் சுயமாக நீடிக்கும்.

ஆகவே தேவர் சாதியினர் தங்களை திரட்டிக்கொள்வதை நான் எதிர்மறையானதாகப் பார்க்கவில்லை. அவர்கள் தங்களை ஜனநாயக அமைப்புக்குள் முன்னேற்றிக்கொள்ள இன்று சாத்தியமான ஒரு வழி என்றே அதை காண்கிறேன். இன்று அவர்களின் சமூகத்திற்குள் இருக்கும் பல்வேறு எதிர்மறைக்கூறுகளை அதன் மூலம் அவர்கள் களைந்துகொள்ள முடியும். உள்முரண்களை தீர்த்துக்கொள்ள முடியும். அதன்மூலம் அவர்கள் பொருளியல் ரீதியாகவும் சமூக ரீதியாகவும் முன்னேற முடியும். அது அவர்களுக்கு மட்டுமல்ல தமிழ்நாட்டுக்கும் நல்லதே.

ஆனால் இதற்குச் சில வழிமுறைகள் உள்ளன. ஜனநாயகம் அந்தவழிகளை மட்டுமே வழங்குகிறது. அந்த கரைகளை மீறுவார்கள் என்றால் அதன் அழிவுகள் அவர்களுக்கு மட்டுமல்ல தமிழ்ச்சமூகத்திற்கேதான் என்றுதான் நான் நினைக்கிறேன். பலவகையிலும் தேவர்சமூகத்திற்குச் சமானமானது நாயர் சமூகம். தேவரையும் வேளாளர்களையும் இணைத்தால் உருவாகும் சமூகம் என அதைச் சொல்லலாம். அதாவது போர்த்தொழிலும் அதற்கான மனநிலைகளும் பண்பாடும் உண்டு. அதேசமயம் வேளாளர்களைப்போல நில உடைமையும் ஆட்சியதிகாரமும் மத அதிகாரமும் கல்வியும் உண்டு.



இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நாயர் சமூகம் இன்றைய தேவர் சமூகம் எதிர்கொள்ளும் பெரும்பாலும் எல்லா வகையான சிக்கல்களையும் சந்தித்துக் கொண்டிருந்தது. ஒன்று, மிதமிஞ்சிய சுயபெருமிதம். ஆட்சியாளர்களே தாங்கள்தான் என்ற எண்ணம். இரண்டு, ஏராளமான உட்பிரிவுகளும் அவர்களுக்குள் மோதலும். மூன்று, இயல்பாகவே ரத்தத்தில் இருந்த வன்முறைப்போக்கும் அதன் விளைவான வெட்டிச்சண்டைகளும் வம்பு வழக்குகளும்.

1920களில் கூட கேரளநாயர் குடும்பங்கள் ஒருவருக்கொருவர் குடிப்பகை என்ற விஷயத்தைப் பேணி வந்தார்கள். ஒருகுடும்பத்தில் ஒருவரை பிறிதொரு குடும்பத்தினர் கொன்றுவிட்டால் அதற்கு இவர்கள் இருவரை கொலை செய்வார்கள். இந்தக் கணக்கு தலைமுறை தலைமுறையாக நீண்டு செல்லும். நடுக்கேரளத்தில் ஒரு பிரபலமான குடிப்பகை எட்டு நூற்றாண்டு வரலாறு கொண்டது என்று கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது! இன்றும்கூட கேரள திரைப்படங்களில் இந்த விஷயத்தைக் காணலாம்.

சுயபெருமிதம் காரணமாக வெட்டி ஆடம்ப்பரங்களில் அழிந்துகொண்டிருந்தது நாயர் சாதி. திருமணங்கள் சாவு விருந்துகள் எல்லாம் பிரம்மாண்டமாகக் கொண்டாடப்படவேண்டும். பெரும்பாலும் சொத்துக்களை விற்றுத்தான் இவை செய்யப்படும். ஒரு விருந்தில் எத்தனை பாயாசம் என்பதே அந்த குடும்பத்தை அளக்கும் அளவுகோலாக இருந்தது. பதிநான்கு பாயசத்துடன் விருந்து போட்டால் அந்தக்குடும்பம் ரொம்ப உசத்தி.

கண்ணெதிரே பிற சாதிகள் மேலெழுந்து வரக்கண்டு பொறாமையும் காழ்ப்பும் கொண்டு அவர்களுக்கு எதிராகப் போராடினார்கள் நாயர்கள். ஈழவர்களின் எழுச்சியை ஆரம்ப கட்டத்தில் வன்முறை மூலம் தடுத்தார்கள். ஈழவர்களின் குடுமிகளை அறுத்தார்கள். நாடார்களின் வளர்ச்சிக்கு எதிராக நின்று அவர்களின் மேலாடைகளை கிழித்தார்கள். அக்காலத்தைய பிரபலமான கருத்துப்படம் ஒன்றில் ஒரு நாயர் பெரிய மழையை சிறிய ஒரு கோவர்த்தன கிரியை தூக்கிக்கொண்டு தடுப்பதைக் காணலாம். கீழே கொஞ்ச நாயர்கள் படுத்து ஓய்வெடுக்கிறார்கள்

ஆனால் நாற்பதுகளில் பாதிப்பங்கு நாயர் குடும்பங்கள் சண்டைகளில் வழக்குகளில் சிதிலமாயின.சொத்துக்கள் பறிபோயின, கௌரம் மட்டும் ம்மிஞ்சியது.முருங்கைக்கீரையும் வாழைத்தண்டும் வேகவைத்து தின்றுகொண்டு வெளியே தெரியாமல் பட்டினிகிடக்கும் நிலைக்கு வந்தார்கள். வாய்ச்சவடால் மட்டுமே துணை. ஊரில் வேலைசெய்யமுடியாது, கௌரவம் தடுக்கும். நாயர் ஆயுதமேந்தலாமெ ஒழிய கலப்பை பிடிக்கக்கூடாது.பட்டினி கிடந்து குழந்தைகள் சாகாமலிருக்கவேண்டுமென்றால் ஊரைவிட்டே செல்லவேண்டுமென்ற நிலை. உங்களூருக்கு காதில் வெறும் பீடியுடன் வந்து இறங்கி சாலையோரம் டீக்கடை போட்ட நாயர் அதனால்தான் அப்படி வந்திருப்பார்.

இந்த இக்கட்டில் இருந்து நாயர் சாதியைக் காப்பாற்றியவர் மன்னத்து பத்மநாபன் என்ற தலைவர். 1878ல் பிறந்த பத்மநாபன் சுதந்திரப்போராளியாகவும் சமூகசீதிருத்தவாதியாகவும் இருந்தவர். 1914ல் நாயர் சர்வீஸ் சொசைட்டி [NSS] என்ற அமைப்பை நிறுவினார். 1970ல் அவர் இறக்கும் வரை என்.எஸ்.எஸ் அமைப்பின் செயலர் பொறுப்பில் இருந்தார். அந்த அமைப்பை கேரளத்தின் எல்லா சின்னஞ்சிறு மூலைக்கும் கொண்டுசென்றார். கரையோகம் என்று சொல்லப்படும் ஊர்க்கிளைகளை அமைத்து அதன்கீழ் ஒரு கிராமத்தைச்சேர்ந்த எல்லா நாயர்களையும் இணைப்பது அந்த இயக்கத்தின் வழிமுறை. ஒப்புநோக்க அது எளிதாகவே இருந்தது. ஏனென்றால் ஏற்கனவே பெரும்பாலான கிராமங்களில் நாயர்களின் மரபான கிராமசபைகள் இருந்தன. அவற்றையே கரையோகங்களாக மாற்றிக் கொண்டார்.

மன்னத்து பத்மநாபனின் பங்களிப்பு என்ன? முதல் சாதனை, சமூக மாற்றத்துக்கு எதிரான திமிர்பிடித்த சக்தியாக இருந்த நாயர் சாதியை அந்த மூர்க்கத்தில் இருந்து விலக்கினார். கேரளத்தில் பிராமணர்களான நம்பூதிரிகள் மொத்தம் ஐம்பதாயிரம்பேர்தான். அடுத்தகட்ட உயர்சாதியான நாயர்கள் சாதியையும் ஆசாரங்களையும் பேணிச்சுமக்கும் பொறுப்பை தாங்களே எடுத்துக்கொண்டு காலக்கடிகாரத்தை பின்னால் திருப்ப முயன்று மொத்த சக்தியையும் வீணடித்துக்கொண்டிருந்தனர். நாயர் சாதியை நிகழ்ந்துகொண்டிருந்த முற்போக்கான சமூக மாற்றங்களுடன் ஒத்துப்போகிறவர்களாக ஆக்கியதே மன்னத்து பத்மநாபனின் பெரும் சாதனை.

1924ல் குருவாயூர், வைக்கம் ஆலயங்களில் தலித்துக்கள் நுழைவதற்கான போராட்டங்களில் என்.எஸ்.எஸ் அமைப்பை காங்கிரஸின் ஆதரவுச் சக்தியாக பங்கேற்கச் செய்தார் மன்னத்து பத்மநாபன். இந்தியச் சுதந்திரப்போராட்டத்திற்கு என்.எஸ்.எஸ்ஸை கொண்டுவந்தார். நாராயணகுருவின் இயக்கத்துடன் நல்லுறவைப் பேணி அவர்களுடன் சேர்ந்து போராடினார். அதாவது நாயர்களுக்கு கீழே இருந்த சாதிகள் நடத்திய உரிமைப்போராட்டங்கள் அனைத்தையும் அவரும் ஆதரித்தார். அவர்களுடன் சேர்ந்து போராடவும் முன்வந்தார். எந்தச் சாதியின் முன்னேற்றமும் நாயரின் முன்னேற்றமாகவே ஆகும் என்பதே அவரது கோஷமாக இருந்தது.

நாயர்களை நிலப்பிரபுத்துவ மனநிலையில் இருந்து வெளியே கொண்டுவந்ததே மன்னத்து பத்மனாபனின் முக்கியமான இரண்டாவது பங்களிப்பு. என்.எஸ்.எஸ் அமைப்பு கேரளம் முழுக்க நூற்றுக்கணக்கான பள்ளிகளையும் கல்லூரிகளையும் ஆரம்பித்தது. இந்தியாவில் மிக அதிகமாக கல்வி நிறுவனங்களை நடத்தும் சாதியமைப்பு என்.எஸ்.எஸ் தான்.

நாயர்கள் அனைவரும் கண்டிப்பாக உயர்கல்வி வரை சென்றாக வேண்டும் என்ற உக்கிரமான பிரச்சாரத்தை அவர் முன்னெடுத்தார். கிறித்தவ மிஷனரிகளின் கல்விச்சேவையை நாயர்கள் முழுக்கமுழுக்க பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என்று சொன்ன மன்னத்து பத்மநாபன் அவர்களை நட்புசக்திகளாகவே அணுகினார்.இன்றுவரை நாயர் சமூகத்தின் வெற்றிக்கும் செல்வத்திற்கும் காரணமாக அமைந்திருப்பது கல்வியே. குறிப்பாக பெண்கள் பட்டப்படிப்பு படித்தாகவேண்டும் என்ற பிரச்சாரத்தை அவர் தொடர்ந்து செய்தார். சின்னஞ்சிறு குமரிமாவட்டத்தில் என்.எஸ்.எஸ் மூன்று கல்லூரிகளை தொடங்கி அரைநூற்றாண்டாக நடத்திவருகிறது. மூன்றுமே பெண்கள் கல்லூரிகள்!

நிலப்பிரபுத்துவ ஆசாரங்களுக்கு எதிரான சீர்திருத்தங்களும் குறிப்பிடத்தக்கவை. கெட்டுகல்யாணம் போன்ற பல ஆசாரங்களை என்.எஸ்.எஸ் தடைசெய்தது. திருமணச் சீர்திருத்தங்கள் என்.எஸ்.எஸ் இயக்கத்தின் முக்கியமான சாதனைகள். ஆடம்பரமான திருமணங்கள் முழுக்கமுழுக்க தடைசெய்யப்பட்டன. ஒரு திருமணத்துக்கு அதிகபட்சம் இத்தனைபேரை மட்டுமே அழைக்கவேண்டும் என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. ஒரு கரையோகத்துக்கு வெளியே யாரையுமே கூப்பிடக்கூடாது. திருமணங்களில் மொய், அன்பளிப்பு போன்ற நிதியுதவிகள் செய்யப்படக்கூடாது.

திருமணத்துக்குப் பிராமணப் புரோகிதர் வருவதை என்.எஸ்.எஸ் தடைசெய்தது. ஹோமங்கள் போன்ற எதுவுமே கூடாது. பத்தே நிமிடத்தில் திருமணம் முடியும். அதாவது திருமணத்துக்கு வந்துவிட்டு கல்விச்சாலைகளுக்கோ வேலைகளுக்கோ போகமுடியவேண்டும். திருமணத்துக்கான பாத்திரங்கள் போன்றவற்றை என்.எஸ்.எஸ் கரையோகமே வைத்திருக்கும். அவை குறைந்த செலவில் வாடகைக்குக் கொடுக்கப்படும். கரையோகம் இளைஞர்கள் வந்து எளிமையாக திருமணத்தை நடத்தித் தருவார்கள். மரணச்சடங்கு இன்னமும் எளிமையானதாக ஆக்கப்பட்டது.

நாயர்களுக்குள் உள்ள அடிதடிச்சண்டைகளை தீர்க்கவும் சிவில் வழக்குகளை முடிக்கவும் கூட்டுச் சமரசமுறையை என்.எஸ்.எஸ் மேற்கொண்டது. நாயர்கள் பெரும்பாலும் கோயில் மரியாதைகளைச் சொல்லி வெட்டுகுத்தில் ஈடுபட்டுவந்தனர் –தேவர்களைப்போலவே. சமரசம் மூலமும் கடுமையான சமூக தண்டனைகள் மூலமும் இந்த வழக்கம் ஐம்பதுகளிலேயே முற்றாக ஒழிக்கப்பட்டது.

கடைசியாக, மிக முற்போக்கான விஷயம் ஒன்று நடந்தது.நாயர்களின் உபசாதிகள் மெல்ல மெல்ல ஒழிக்கப்பட்டு ஒரே சாதியாக அது ஆக்கப்பட்டது. இன்று உபசாதி அடையாளமே அனேகமாக இல்லை. திருமணங்களில்கூட பார்க்கப்படுவதில்லை. மேலும் சமானமான சாதிகளையும் என்.எஸ்.எஸ் உள்ளிழுத்துக்கொண்டது. கேரளத்தில் நூறாண்டுகளுக்கு முன்னால்வரை ஏராளமான தமிழக வேளாளர் இருந்தார்கள். திருவிதாங்கூர் மன்னர்களாலும் அதற்கு முன்னர் சோழர்களாலும் குடியேற்றப்பட்டவர்கள். பெரும்பாலும் ஊர்க்கணக்குப்பிள்ளைகள். அவர்கள் என்.எஸ்.எஸ்ஸில் உறுப்பினராகலாம், அவர்களும் நாயர்களே என என்.எஸ்.எஸ் அறிவித்தது.

இப்போது அரை நூற்றாண்டுக்காலம் கழித்து அவர்கள் அனேகமாக அனைவருமே நாயர்சாதிக்குள் இணைந்து மறைந்துவிட்டிருக்கிறார்கள். பல குடும்பங்களில் கேட்டுப்போனால் பாட்டி தாத்தாக்கள்தான் வேளாளர்களாக இருப்பார்கள். அதேபோல ரெட்டியார்களும் கணிசமானவர்கள் நாயர்களாக ஆகிவிட்டிருக்கிறார்கள்.

எப்படிப்பார்த்தாலும் நாயர்களுக்கு ஈழவர்கள்தான் போட்டிச்சமூகம். எண்ணிக்கையிலும் சமூக நிலையிலும் எல்லாம். அந்தப்போட்டி எப்போதும் உள்ளது. அரசியலில், இலக்கியத்தில் எங்கும். ஆனால் எப்போதுமே என்.எஸ்.எஸ் ஈழவர்களின் அமைப்புடன் நட்புறவைப் பேணி வருகிறது. என்.எஸ்.எஸ் உருவான பின்னர் கடந்த அரைநூற்றாண்டில் எங்குமே நாயர்- ஈழவர் கலகம் நிகழ்ந்ததில்லை. ஈழவர்களின் மாநாடுகளில் என்.எஸ்.எஸ் தலைவர்கள் பேசுவது சாதாரணம். அய்யன்காளி உருவாக்கிய புலையர் மகாசபையின் நிகழ்ச்சிகளிலும் என்.எஸ்.எஸ் தலைவர்கள் சாதாரணமாகப் பங்குகொள்கிறார்கள்.

ஆனால் என்ன சொன்னாலும் என்.எஸ்.எஸ் ஒரு வலதுசாரி அமைப்புதான். அது எப்போதும் இடதுசாரி இயக்கங்களுக்கு எதிராகவே இருந்துவந்துள்ளது. அது ஒரு ‘பண்ணையார்’ அமைப்பும்கூட. அதன் தலைமை எப்போதுமே உயர்குடும்பங்களுக்குரியதுதான். சாதி என்பது நிலப்பிரபுத்துவம் சார்ந்தது. அதில் வேர்கொண்ட ஓர் அமைப்பில் ஜனநாயகம் இருக்க முடியாது. அதாவது அது ஒரு முற்போக்கு அமைப்பு அல்ல. அது நிலப்பிரபுத்துவ அமைப்புக்குள் உள்ள முற்போக்குத்தன்மை கொண்ட ஓரு நகர்வு எனலாம். நிலப்பிரபுத்துவத்தில் இருந்து ஒரு சமூகத்தை அது முதலாளித்துவத்திற்குக் கொண்டுவந்தது, அவ்வளவுதான்.

இன்று கேரளத்தில் என்.எஸ்.எஸ் அமைப்பு அதன் நேரடிப்பங்களிப்பு பெரிதும் குறைந்து ஒரு நிர்வாக அமைப்பாக மட்டும் எஞ்சியிருக்கிறது. இன்றைய நாயர்களுக்கு அந்த அமைப்பின் வழிகாட்டல் தேவை இல்லை. அவர்கள் புதுமுதலாளித்துவத்தில் வாழ்கிறார்கள். சாதியை விட பணமே இன்று அவர்களுக்கு முக்கியமான அடையாளமாக உள்ளது.

நான் தேவர்பூஜைக்குச் சென்றபோது கண்டது என்.எஸ்.எஸ் போன்ற ஓர் அமைப்பின் தேவையையே. முத்துராமலிங்கத்தேவர் அப்படி ஒரு அமைப்பை உருவாக்கியிருக்க வேண்டும். அவரால் முடியவில்லை. மூன்று முக்கியமான குறைபாடுகளைக் கண்டேன். ஒன்று தேவர்களின் உட்பிரிவுகளுக்கு இடையே இன்றும்கூட சரியான புரிந்துணர்வு இல்லை. இரண்டு, அந்தச் சாதி இன்னமும் ஓர் அமைப்பாக திரளவில்லை. ஆகவே எந்தவகையான கட்டுப்பாடும் இல்லை. ஒவ்வொரு பண்ணையாரும் ஒரு கும்பலை திரட்டி வருகிறார்கள். அவர் அழைக்கிறார் இவர் அழைக்கிறார் என விதவிதமான போஸ்டர்களை மட்டுமே எங்கும் காண நேர்ந்தது.

மூன்றாவதாக, அவர்களுக்கு எந்த இலக்கும் இல்லை. எந்த அரசியல் கனவும், எந்த சமூகத்திட்டமும், எந்த பொருளியல் இலக்கும் இல்லை. தன்னிச்சையாகக் கிளம்பி வந்த ஒரு மக்கள்திரளாகவே இருந்தார்கள். ஆகவேதான் எளிதில் எதிர்மறை உணர்ச்சிகள் ஓங்குகின்றன. பிறசாதிகளுக்கெதிராக அவர்கள் எழுப்பிய கோஷமும் அவர்களில் தெரிந்த வெறுப்பும் அவர்களுடைய சொந்த முன்னேற்றத்துக்கே எதிரானவை.

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் அவர்களின் வாழ்க்கையை நாம் பலவகையில் இன்று பார்க்க முடிகிறது. அவரது ஆரம்பகட்டத்தி தேசவிடுதலையில் பங்கெடுத்துச் சிறைசென்றவராக, சமூகசீர்திருத்தவாதியாக, தொழிற்சங்கவாதியாகக் காண்கிறோம். இரண்டாம் கட்டத்தில் அவர் காந்தியின் அகிம்சையில் நம்பிக்கை இழந்து காங்கிரஸில் இருந்து வெளியேறி, அரசியலில் தனிமைப்பட்டு, கசப்படைந்த சாதித்தலைவராக இருந்தார். அக்காலகட்டத்தில்தான் இம்மானுவேல் சேகரன் கொலைவழக்கில் அவர் சம்பந்தப்பட்டதாக சொல்லப்படுகிறது.

ஒரு நண்பர் இமானுவேல் சேகரன் கொலைவழக்கில் பக்தவல்சலம் அளித்த சட்டச்சபை அறிக்கையின் நகலை அனுப்பியிருந்தார். அந்த ஆவணங்களை மட்டுமல்ல பல தனிப்பட்ட கடிதங்களையும் அக்காலகட்ட பல வெறுப்பூட்டும் துண்டுப்பிரசுரங்களையும் நான் மறைந்த தாணுலிங்கநாடார் அவர்களின் சொந்த சேகரிப்பில் 1981ல் அவரது கோரிக்கைப்படி அவரது காகிதங்களை நான் சீராக்கியபோது வாசித்திருக்கிறேன். தெரிந்தே அந்த வரலாற்றுக்குள் இன்று நான் செல்லவிரும்பவில்லை. எப்படியானாலும் முத்துராமலிங்கத் தேவர் அவர்கள் இன்று அச்சாதியின் முத்திரை. அவரது ஒளிமிக்க ஆளுமைப்பக்கத்தை வைத்து அவரைக் கட்டமைத்துக்கொள்வதே அச்சாதிக்கு நல்லது.

தேவர்கள் தங்களை உறுதியான இலக்குள்ள அமைப்பாக ஆக்கிக்கொண்டு, சகசாதிகளுடன் இயல்பாக இணைந்துபோய், தங்களுடைய கல்வி மற்றும் தொழில் நலன்களுக்காக சீராக போராடுவார்கள் என்றால் இந்தச் சாதியடையாளம் அவர்களுக்கு ஓர் எல்லை வரை நன்மைபயக்கக் கூடும். இன்றைய கட்டற்ற போக்கையும் சகஜாதிகள் மேல் வெறுப்பையும் அவர்கள் முன்னெடுத்தால் இழப்பு அவர்களுக்கே. தேவர்கள் அல்ல, எவர் நினைத்தாலும் சமூக மாற்றத்தை தடுத்து நிறுத்திவிடமுடியாது. அது காலவெள்ளம்.

தேங்கியவர்கள் பின்னுக்குத்தள்ளப்படுவார்கள் என்பதே சமூக இயங்கியலின் விதியாகும்.

ஜெ

Friday, November 19, 2010

கண்டதேவி தலித் மக்கள்

யுத்த பூமிக்குள் நுழைந்துவிட்டதைப் போன்ற அச்ச உணர்வு. எந்த திசை திரும்பினாலும் ஆயிரக்கணக்கில் குவிந்திருக்கிறது துப்பாக்கி ஏந்திய போலிஸ். வழியெங்கும் ‘செக் போஸ்ட்'டுகள். இந்தியாவுக்குள் நுழையும் பாகிஸ்தான்காரர்களைப் போல, சோதனை மேல் சோதனை. கண்டதேவிக்குச் செல்லும் நான்கு வழிச் சாலைகளும் காவலர்கள் கட்டுப்பாட்டில்! அடையாள அட்டைகள் குறைந்தபட்சம் பத்து முறையாவது சரிபார்க்கப்படுகின்றன. ஊருக்குள் நுழையும் ஒவ்வொரு முகத்தையும் நெருக்கமாகப் படம் பிடிக்கின்றன மூலைக்கு மூலை இருக்கும் கேமராக்கள். இது ஒரு பக்க நிகழ்வு.

இன்னொரு பக்கம்... வடம் பிடிக்க அல்லாமல், தேரோட்டத்தைப் பார்க்கவும், சாமி கும்பிடவும் கிளம்பி வந்த சுமார் மூவாயிரம் தலித் மக்களைக் கொத்துக் கொத்தாக கைது செய்து, சம்பந்தமேயில்லாமல் திருமண மண்டபங்களில் அடைத்து வைக்கிறது காவல்துறை. கண்டதேவி சேரிவாசிகள் முந்தைய நாளே ஊரைவிட்டு அப்புறப்படுத்தப்பட்டிருந்தனர். புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி திருச்சியிலும், விடுதலைச் சிறுத்தைகள் பொதுச் செயலாளர் திருமாவளவன் மதுரையிலும் கைது செய்யப்படுகின்றனர். தவிர, முந்தைய நாள் இரவே சுமார் முப்பத்தைந்து தலித் தலைவர்களும் ஆர்வலர்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டனர்.



மற்றொரு பக்கம்... ‘ஆபரேஷன் கண்டதேவி'யை வெற்றிகரமாக நடத்திக் காட்ட வேண்டுமே என்ற பதட்டத்தில் கலெக்டர் ஆனந்த்ராவ் பட்டேல். ஊருக்கு வெளியே தலித் மக்களை கைது செய்து கொண்டே... "தேரோட்டத்தில் கலந்து கொள்ளவும், வடம் பிடிக்கவும் எல்லா சமூக மக்களும் தாங்களாகவே வருவார்கள். ஒற்றுமையாக வடம் பிடிப்பார்கள். அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை நாங்கள் செய்திருக்கிறோம்'' என்று புன்னகை மாறாமல் பேட்டி அளித்துக் கொண்டிருந்தார்.

சரியாக பிற்பகல் 2.10 மணிக்கு அரங்கேறியது, ஆதிக்க நாடகம். நான்கு நாடுகளைச் சேர்ந்த அம்பலக்காரர்களும் அழைக்கப்பட்டனர். அவசர அவசரமாக அவர்களுக்கு முதல் மரியாதை அளிக்கப்பட்டது. பிறகு, ஆயிரக்கணக்கான போலிஸ் காவலுக்கு நிற்க, கர்வமும் திமிருமாக ணவக் கொக்கரிப்போடு கள்ளர்களும் அவர்களோடு "மப்டி'யில் இருந்த காவலர்களும் தேரை இழுத்தனர். முக்கால் மணி நேரத்தில் பரபரவென்று தேர் நான்கு வீதிகளையும் சுற்றி வந்து நிற்க... வெற்றிக் களிப்பில் கள்ளர்கள் பலமாக கை தட்டி ஆரவாரம் செய்தார்கள். தலித் மக்கள் முகத்தில் அரசும் சாதி இந்துக்களும் சேர்ந்து, டன் டன்னாக கரி பூசிய நாள் என்று வரலாற்றில் குறித்துக் கொள்ளலாம். சாதிக்கு எதிராக எதையுமே முன்னிறுத்த முடியாத கையாலாகாத சமூகம் இது என்பதைதான் கண்டதேவி மீண்டும் நிரூபித்திருக்கிறது.

தலித் மக்களுக்காக ஒதுக்கப்பட்ட தனித்தொகுதியான கண்டதேவியில் தேர்தல் பிரச்சனையாகாமல், தேரோட்டம் ஏன் இவ்வளவு பெரிய பிரச்சனையாகிறது? தலித் மக்கள் கோயிலுக்குள் சென்று வழிபடும் உரிமையை அறுபதாண்டுகளுக்கு முன்னரே பெற்றுவிட்ட நிலையில், வடம் பிடிக்கும் உரிமையை மட்டும் பகிர்ந்து கொள்ள சாதி இந்துக்கள் மறுப்பது ஏன்? இந்தக் கேள்விக்கு விடை தெரிய வேண்டுமானால், நாம் கண்டதேவி என்ற குக்கிராமத்தின், மிகச் சிக்கலான பின்னணியை முழுமையாகத் தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது...

மதுரை தேவகோட்டை சாலையில், ராம் நகரிலிருந்து மூன்று கிலோ மீட்டர் உள்ளே தள்ளி இருக்கிறது கண்டதேவி. இங்குள்ள சொர்ணமூர்த்தீஸ்வரர் கோயில், வரலாற்றுச் சிறப்புமிக்கதாக கருதப்பட்டு வருகிறது. அய்நூறுக்கும் குறைவான குடும்பங்களே வசிக்கும் சிறு கிராமம்தான் என்றாலும் சாதி இவ்வூருக்கு ‘சிறப்புத் தகுதியை' பெற்றுத் தந்திருக்கிறது. முன்னூறுக்கும் மேற்பட்ட கள்ளர் குடும்பங்கள் வசிக்கும் கண்டதேவியில் பள்ளர், பறையர், நாடார், பார்ப்பனர், பிள்ளை, ஆசாரி, வேளார், வளையர் எனப் பல சாதியினர் மிகக் குறைந்த எண்ணிக்கையில் இருக்கின்றனர்.

கண்டதேவி மக்களின் முக்கியமான தொழில் விவசாயம். குறிப்பாக, தலித் மக்களின் வாழ்வாதாரம் விவசாயத்தை மய்யமாகக் கொண்டது. விவசாயம் சார்ந்த வேறு சில தொழில்களில் தலித் மக்கள் ஈடுபட்டு வந்தாலும், பொருளாதார ரீதியாக அவை பெரிதளவு உதவவில்லை. அதே வேளை, கள்ளர்களின் வியாபாரத் தளம் மிகவும் பலமிக்கது. தேவகோட்டையில் இருக்கும் அத்தனை பெரிய கடைகளும் கள்ளர்களுக்கானது என்ற வகையில் அவர்களின் பொருளாதார நிலை பற்றி சொல்வதற்கு எதுவுமில்லை.


கண்டதேவியிலும் அதைச் சுற்றிலும் உள்ள நிலங்கள் 65 சதவிகிதத்திற்கும் மேல் கள்ளர்களிடமே இருக்கிறது. அவர்களுக்கு அடுத்ததாக தலித் மக்களிடம் 25 சதவிகித நிலங்கள் உள்ளன. நிலம் பற்றி பேசும்போது, இங்கு கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம்: கோயில் பெயரில் இருக்கும் சுமார் முன்னூறு ஏக்கர் நிலத்தில் ஒரு பகுதியை இப்போது கள்ளர்கள் கையகப்படுத்தியுள்ளனர். விடுதலை பெற்று நம் நாடு ஜனநாயகமானதாக மாறி இத்தனை ஆண்டுகள் ஆகிவிட்ட பிறகும் இன்னும் அங்கு ‘நாடு' முறை நடைமுறையில் இருப்பதுதான் கண்டதேவியின் தனித்துவ பிரச்சனை.

நிர்வாக வசதிக்காக இந்தியாவை கிராமம், பஞ்சாயத்து, ஒன்றியம், வட்டம், மாவட்டம், மாநிலம் என்று பிரித்திருப்பது போல மன்னராட்சியில் நிர்வாக வசதிக்காக, 22 1/2, 32 1/2, 42 1/2, 64 1/2, 96 1/2 என்று கிராமங்களை ஒன்றிணைத்து நாடுகளாகப் பிரித்தனர். இதற்கு வாரிசு முறையில் ஒரு அம்பலம் நியமிக்கப்பட்டிருந்தார். மன்னரின் சார்பாக வரி வசூல் செய்வதும், ஊர் பஞ்சாயத்து செய்வதும், அரசுக்கு தேவைப்படுகிறபோது படைக்கு ஆள் அனுப்புவதும் இவர்களுடைய வேலை. தலித் மக்கள் அம்பலங்களாக இருந்ததில்லை. பெரும்பாலும் கள்ளர்கள்தான்.

கண்டதேவியைச் சுற்றி உஞ்சனை, செம்பொன்மாரி, தென்னிலை, இரவுசேரி என நான்கு நாடுகள் உள்ளன. இந்திய துணைக் கண்ட அரசின் சமஸ்தானங்கள் இணைக்கப்பட்ட பிறகு, எல்லா பகுதிகளும் இந்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வந்துவிட்டன. ஆனாலும் விடுதலைக்குப் பிறகு காலாவதியாகிப் போன ‘நாடு' நிறையை கள்ளர்கள் இன்னும் கைவிட்ட பாடில்லை. காரணம், அம்பலங்களாக இருந்து அனுபவிக்கும் அதிகார சுகத்தைத் துறப்பதற்கு அவர்கள் தயாராக இல்லை. நாடு அதிகாரம் இருப்பதால், அம்பலங்கள் அரசர்களைப் போல வலம் வருகிறார்கள். அவர்களை மீறி அங்கு ஒரு அணுவும் அசையாது.

சொர்ண மூர்த்தீஸ்வரர் கோயிலைப் பொறுத்தவரை, அதன் நிர்வாகம் மொத்தத்தையும் நான்கு நாட்டைச் சேர்ந்த அம்பலங்கள் கைக்குள் வைத்திருக்கிறார்கள். கண்டதேவியில் ஆதிக்கம் அதிகாரம், செல்வம் செல்வாக்கும் கோயிலை சார்ந்தே இருப்பதால்தான் இவ்வளவு பிரச்சனையும். அம்பலங்கள் கோயில் உரிமையை விட்டுக் கொடுக்காததற்கு முக்கிய காரணம், அவர்களிடம் இன்று இருக்கும் அதிகாரமும் வளமும் முழுக்க முழுக்க கோயில் தந்தது. தங்களுக்கும் பங்கு வேண்டும் என்று வேறு சாதிக்காரர்களும் வந்துவிடுவார்களோ என்ற பதட்டத்தில்தான் கள்ளர்கள் தங்களின் தேர்வட உரிமையைப் பங்கிட மறுக்கிறார்கள்.

1936 ம் ஆண்டிலேயே கண்டதேவி கோயிலுக்குள் தலித் மக்கள் நுழைந்துவிட்டனர் என்றாலும், இன்றுவரை தேர்வடம் பிடிக்க அனுமதிக்கப்படவில்லை. 1953 ம் ண்டு தேர்வடம் பிடிக்க வந்த தலித் மக்கள், முதல் முறையாக மேல் சட்டை அணிந்து வந்திருக்கிறார்கள். வழக்கமாக வால் பகுதியில் மட்டுமே வடத்தைப் பிடிக்க அனுமதிக்கப்பட்டவர்கள், தலைப் பகுதியைப் பிடிக்க முயல இந்த இரண்டு காரணங்களுக்காகவும் தலித் மக்களை மூர்க்கமாகத் தாக்கினர் கள்ளர்கள். "இப்படியொரு இழிவை சந்தித்து சாமி கும்பிட வேண்டிய அவசியமில்லை' என்று தலித் மக்கள் ஒதுங்கத் தொடங்கியது அப்போதுதான். அவர்கள் தேரோட்டத்தில் பங்கேற்க விரும்பாமல் போனதற்கு இன்னொரு முக்கியமான காரணம் உஞ்சனைக் கலவரம்.

இருபத்தைந்து ஆண்டுகள் கடந்துவிட்டாலும், உஞ்சனை கலவரம் ஏற்படுத்திய பாதிப்பிலிருந்து இன்னும்கூட தலித் மக்கள் மீளவில்லை. கோயில் வழிபாட்டு உரிமை கேட்டதற்காகவும், கள்ளர்களுக்கு சரிநிகராக கோலாகலமாக திருவிழா கொண்டாடியதற்காகவும் கள்ளர்கள் கொலைக் கருவிகளை கொண்டு தலித் மக்களை தாக்கினர். அய்ந்து பேர் அதே இடத்தில் உயிரிழக்க, 29 பேர் பலத்த காயங்களோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட, கால்நடைகளைக் கொன்று, வீடுகளை தீ வைத்து தங்கள் சாதி வெறியை தணித்துக் கொண்டனர் கள்ளர்கள். ஆயிரத்து அய்நூறு சாதி இந்துக்கள் கைது செய்யப்பட்டும் தண்டனையின்றி எல்லோருமே விடுவிக்கப்பட்டனர். நீதி விலை போவதை நேரடியாகப் பார்த்த தலித் மக்கள் மனச் சோர்வு அடைந்தனர். ஆனால், மிக விரைவிலேயே நிலைமை மாறியது.


தேர் வடம் பிடிக்கும் உரிமை தங்களுக்கும் உண்டு என்று தலித் மக்கள் உரிமைக் குரல் எழுப்பினர். 1997 ம் ண்டு தலித் இளைஞர் ஒருவர் தேரை இழுக்க முற்பட, அவரை கள்ளர்கள் அடித்துத் துரத்தினர். புதிய தமிழகம் கட்சி மற்றும் வேறு சில தலித் அமைப்புகள், கண்டதேவி மக்களோடு கைகோர்க்க, போராட்டத்துக்குப் புத்துயிர் கிடைத்தது. 1998 இல் டாக்டர் கிருஷ்ணசாமி தொடுத்த வழக்கின் தீர்ப்பாக, "அனைத்துச் சாதியினரும் தேர் வடம் பிடிக்க உரிமை இருக்கிறது' என்று உயர் நீதிமன்றம் சொல்லியும்கூட, இன்றுவரை தலித் மக்கள் பங்கேற்க முடியவில்லை. தேரோட்டமே இல்லாமல் போனாலும் சரி, தலித் மக்களோடு சேர்ந்து தேரிழுக்க மாட்டோம் என்று சாதிவெறியில் துடிக்கும் கள்ளர்களுக்கு இந்த நாள் வரை ஆதரவாகவே இருந்து வந்திருக்கிறது ஆளும் அரசு.

காரணம், கண்டதேவி பகுதியைப் பொறுத்தவரை, வாக்கு வங்கி கள்ளர்கள்தான். அவர்கள் எந்தக் கட்சியை கை நீட்டுகிறார்களோ, அதுதான் தேர்தலில் வெற்றிபெற முடியும் என்பதால் அ.தி.மு.க.வோ, தி.மு.க.வோ கள்ளர்களை பகைத்துக் கொள்ளத் தயாராக இல்லை.

ஜனநாயகத்தின் முக்கிய தூணான நீதிமன்றத்தின் எந்த உத்தரவையும் தமிழக அரசோ, அதன் ‘கடமைமிகு' ஊழியர்களோ பின்பற்றவில்லை. "தலித் மக்களுக்கு வடம் பிடிக்கும் உரிமை உண்டு. வெறும் கணக்கிற்காக பத்துப் பேரை வைத்து தேரை இழுக்காமல், தலித் மக்கள் முழுமையாகப் பங்கேற்கும் வண்ணம் தேரோட்டத்தை நடத்த வேண்டியது மாவட்ட நிர்வாகத்தின் கடமை'' என்று உயர் நீதிமன்றத் தீர்ப்பு தெளிவாக வலியுறுத்தியும், அரசு அதைத் துளிகூட மதிக்கவில்லை. தலித் சமூகத்தைச் சேர்ந்த ஆளுங்கட்சியின் தொண்டர்கள் சிலரையும், அடிவருடிகள் சிலரையும் பொறுக்கி எடுத்து ‘நாங்களும் தேரிழுத்தோம்' என்று சொல்ல வைத்து நாடகமாடியதோடு, அந்த ஒரு சிலர் வடத்தைத் தொடுவது போல புகைப்படம் எடுத்து, போலி வணங்களையும் தயாரித்து வைத்திருக்கும் துணிச்சலில்தான் 26 பேர் தானாக வந்து தேரிழுத்தார்கள் என்ற கட்டுக்கதையை விடாமல் சொல்கிறது அரசு.

‘எட்டாண்டுகளுக்குப் பிறகு, தலித் மக்களையும் பங்கேற்கச் செய்து தேரை சுமூகமாக ஓட வைத்து விட்டோம்' என்று தமிழக அரசு மார்தட்டிக் கொள்ளலாம். அரசு பெருமைப்பட்டுக் கொள்கிறபடி உயிரிழப்போ, சிறு அசம்பாவிதமோ கூட ஏற்படவில்லைதான். ஆனால், ஊர் ஊராக சத்தமே இல்லாமல் சிறைப்படுத்தப்பட்ட தலித் மக்களின் மனக் கொதிப்புக்கு மத்தியில் கள்ளர்கள் கூடி இழுத்த தேரின் சக்கரங்களுக்கு அடியில் நசுங்கிச் செத்தனவே ஜனநாயகமும் சமத்துவமும்! அது படுகொலை இல்லையா?

தலித் மக்களின் கண்டதேவி போராட்டத்துக்கு சட்ட ரீதியாக துணை நிற்கும் வழக்குரைஞர் கே. சந்துரு, "போன ஆண்டும், வெறும் கணக்குக்கு பத்து பேரை தேரிழுக்க வைத்தார்கள் என்பதற்காகத்தான் இந்த முறை அது கூடாது என்று வலியுறுத்தி மறு உத்தரவு வாங்கினோம். ஆனால், நீதிமன்ற உத்தரவை மாவட்ட நிர்வாகம் திட்டம் போட்டு புறக்கணித்துவிட்டது. சட்டப்படி பார்த்தால், கலெக்டர் மீதும் ஆர்.டி.ஓ. மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். கண்டதேவிக்குள் செல்ல எல்லோருக்கும் அனுமதி இருக்கிற பட்சத்தில் கிருஷ்ணசாமி, திருமாவளவன் உள்ளிட்ட பலரை கைது செய்ததும் சட்டத்துக்குப் புறம்பானது. அந்தக் கைதும் கண்டதேவியில் பண்ணவில்லை. திருச்சியிலும் மதுரையிலும் கைது செய்ய வேண்டிய அவசியமென்ன? இந்தக் கைதும், தடை உத்தரவும் நீதிமன்ற அவமதிப்பாகும். இரு தரப்பினரையும்தான் கைது செய்தோம் என்று காவல் துறை சொல்வதே தவறு. ஒடுக்குகிறவரையும் ஒடுக்கப்படுகிறவரையும் எப்படி ஒரே மாதிரி நடத்த முடியும்?


நீதிமன்றம் உத்தரவு போடுகிறது. அவ்வளவுதான். சாதி ஒழிக்கப்பட வேண்டுமென்றுதான் அதுவும் விரும்புகிறது. ஆனால், நடைமுறை அப்படியில்லை. போன முறை கலெக்டர் சந்தோஷ்பாபுவை சாதிப் பெயரைச் சொல்லி திட்டி தாக்க வந்தனர் நாட்டார்கள். எஸ்.சி./எஸ்.டி. சட்டத்தில் அவர் கிரிமினல் வழக்குப் பதிவு செய்ய, அவரை இரவோடு இரவாக இடமாற்றம் செய்தது அரசு. ஒரு கலெக்டருக்கே இந்த நிலை என்றால், சாதாரண மக்களை நினைத்துப் பாருங்கள். அந்தக் காலத்தில் பெரியார் மாதிரியான தலைவர்கள் துணிச்சலாக களமிறங்கினர் என்றால், அவர்கள் நீதிமன்ற உத்தரவுக்காக காத்திருக்கவில்லை. கண்டதேவியை பொறுத்தவரை, தீர்வு என்பது நீதிமன்றத்துக்கு வெளியேதான் இருக்கிறது. இந்தப் பிரச்சனையை இயக்கங்கள் மிகத் தீவிரமாக கையில் எடுக்க வேண்டிய சரியான நேரமிது. ஏனென்றால், மக்கள் உண்மையாக எழுச்சி பெற்றிருக்கிறார்கள். இதை இயக்கத் தலைவர்கள் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்'' என்கிறார்.

ஊரெங்கும் தலித் மக்கள் கொதித்துப் போயிருக்கிறார்கள். மாலையிட்டான் வயல் கிராமத்தைச் சேர்ந்த மக்கள், "வடம் பிடிக்க எல்லாரும் வாங்கன்னு கலெக்டரே போஸ்டர் அடிச்சு ஒட்டவும், எங்க ஊர்ல இருந்து நாங்க அம்பது பேர் ஆர்வமா கிளம்பிப் போனோம். ஆனா, சிறுமருதூர்கிட்ட எங்கள பத்து பதினஞ்சு போலிசு மறிச்சாங்க. "வண்டியில ஏறுங்க நாங்களே பத்திரமா கொண்டு போய் கண்டதேவியில விட்டுடுறோம். பிரச்சனை எதுவும் வந்துடக் கூடாதுல்ல'னு சொன்னாங்க. முதல்ல மறுத்துட்டோம். மிரட்டி ஏத்துனாங்க. எங்களைக் கொண்டு வந்து தேவகோட்டை கல்யாண மண்டபத்துல அடைச்சுட்டாங்க. சாயங்காலம் ஆறு மணிக்குதான் விட்டாங்க. போனவருஷமே வடம் பிடிக்க முடியலன்னாகூட, தூர நின்னு தேரையாவது பார்த்தோம். இந்த வருஷம் அந்த உரிமையும் இல்ல. தேரோட்டத்த டிவியிலதான் பார்த்தோம். கைது பண்ற அளவுக்கு நாங்க என்ன தப்புப் பண்ணினோம்? எல்லாம் நல்லா நடந்த மாதிரியே நியூஸ் போடுறாங்க. நாங்களும் தேரிழுக்கலாம்னு கோர்ட்டு உத்தரவு போட்டிருக்கும்போது ஏன் இந்த அரசாங்கம் இப்படி நடந்துக்குது?'' என்கிறார்கள் கோபமாக.

அரசாங்கம் அப்படிதான் நடந்து கொள்ளும். எந்த அரசு ஒடுக்கப்பட்ட மக்களிடம் நியாயமாக நடந்து கொண்டிருக்கிறது இப்போது மட்டும் அதை எதிர்பார்த்துவிட... அரசியல்வாதிகள் ஏதோ ஓரளவுக்கு மக்களை மதிக்கிறார்கள் என்றால், அது ஓட்டுக்காகத்தான். ஆனால், தலித் மக்களை வாக்குவங்கி என்ற அளவில்கூட அவர்கள் மதிப்பதில்லை.

மக்கள் கறுப்புக் கொடி ஏற்றியிருக்கிறார்கள், அ.தி.மு.க. அடையாள அட்டைகளையும் கரை வேட்டிகளையும் எரித்திருக்கிறார்கள். டாக்டர் கிருஷ்ணசாமி மீண்டும் ஒரு வழக்குத் தொடுக்கப் போவதாகவும், ஆளுநர் மாளிகை முன் ஆர்ப்பாட்டம் செய்து மனு கொடுக்கப் போவதாகவும் அறிவித்திருக்கிறார். விடுதலைச் சிறுத்தைகள் ‘நாங்கள் இந்நாட்டு குடிமக்களாக மதிக்கப்படவில்லை' என்பதற்கு அடையாளமாக குடும்ப அட்டைகளையும், தேர்தல் அடையாள அட்டைகளையும், அரசிடமே திரும்ப கொடுக்கப் போவதாக சொல்லியிருக்கிறார்கள். சி.பி.எம். கட்சியும் உள்ளூர் அமைப்பான "கண்டதேவிதேர் நடவடிக்கை குழு'வும் அடுத்தடுத்து சட்டரீதியான, ஜனநாயகரீதியானப் போராட்டங்களை அறிவித்திருக்கின்றன.


அனைத்துப் போராட்டங்களும் நடந்து முடிந்த பிறகு என்ன நடக்கும்...? அடுத்த ஆண்டு ஆனி மாதம் கள்ளர்கள் கூடி தேரிழுக்கப் போகிறார்கள். சாதிப் புரையோடிப் போன இந்த சமூகத்திடம் பாகுபாட்டை கட்டிக்காக்கும் இந்த அரசிடம், இதை மீறிய ஒரு நீதியைப் பெற்றுவிட முடியாது என்பதே நம் பல்லாண்டு கால அனுபவம். ஒரு பக்கம் தலித் அமைப்புகள் ‘நாம் இந்துக்கள் அல்ல' என்ற முழக்கத்தை தீவிரப்படுத்தி வருகின்றன. இன்னொரு பக்கம் கண்டதேவி மாதிரியான இந்துக் கோயில்களில் உரிமை கேட்டுப் போராட்டங்கள் நடக்கின்றன. தலித் மக்கள் இந்துக்கள் அல்ல என்பது வரலாற்று உண்மையானால், இந்து கோயில்களில் உரிமை கேட்டு ஏன் இத்தனை ஆயிரம் காலம் இழிவையும் அவமானத்தையும் சந்திக்க வேண்டும்? நம்மை சாதி பெயராலும், சாமி பெயராலும் ஒதுக்கி வைத்திருக்கும் இந்துக்களிடமே உரிமையையும் சமத்துவத்தையும் நாம் எதிர்பார்க்கிறோமா? சமூக, பொருளாதார, அரசியல் மற்றும் கல்வி வளர்ச்சிக்கு ஒருபோதும் உதவாத ஒரு உரிமைக்காக இத்தனை ஆண்டுகாலம் தலித்துகள் அவமானத்தை சந்தித்திருக்க வேண்டுமா? சமூக அந்தஸ்தையோ, சுயமரியாதையையோ ஒரு காலம் மீட்டுத் தராத ஒரு விஷயத்துக்காக இத்தனை உயிர்களை நாம் இழந்திருக்க வேண்டுமா?

இந்து மதம் பார்ப்பனர்களின் தனிச் சொத்து. அதை அவர்களே வைத்துக் கொள்ளட்டும். சாதி இந்துக்கள் அதில் உரிமைகளைப் பெற முடிந்து ஆதிக்கத்தை கைப்பற்றுகிறார்களா? நல்லது... அது அவர்கள் விருப்பம். னால், இந்துக்கள் அல்லாத தலித்துகள் சாதிப்படி நிலைக்காக சூழ்ச்சிகரமாக இந்துவாக்கப்பட்டவர்கள் ஏன் மல்லுக்கு நிற்க வேண்டும்?

கண்டதேவி மாதிரியான தேர்வடப் பிரச்சனைகளுக்கு சரியான தீர்வு, இந்து மதத்தை விட்டு வெளியேறுவதுதான். அதில் வன்முறைக்கு இடமில்லை; அம்பேத்கர் வழிகாட்டுதலிலான சட்ட ரீதியான நடைமுறைத் தீர்வு அது. கோயிலுக்குள் நுழைவதும் வடம் பிடிப்பதும் தலித் மக்களின் உரிமை என்ற அடிப்படையில்தான் இவ்வளவு பிரச்சனைகள். தலித் கட்சிகளும் இயக்கங்களும்கூட அந்த உரிமையை (!) வலியுறுத்துகின்றன. மண்ணுரிமை கேட்கிறோம், பொது இடங்களில் உரிமை கேட்கிறோம், பொது வளங்களில் பங்கு கேட்கிறோம், அரசுத் துறைகளில் ஒதுக்கீடு, அரசியல் சமூக அங்கீகாரம் கோருகிறோம். இந்நாட்டு குடிமக்கள் என்ற அடிப்படையில் மேற்கூறிய உரிமைகளைக் கேட்பதற்கும் பெறுவதற்கும் தலித் மக்களுக்கு முழு உரிமை உண்டு.

ஆனால், இந்துக்கள் அல்லாத, வலுக்கட்டாயமாக இந்துவாக்கப்பட்ட தலித் மக்கள் இந்து கோயிலில் உரிமை கேட்டுப் போராடுவதிலும் அவமானப்படுவதிலும் உயிர்களை இழப்பதிலும் ஏதாவது அர்த்தமிருக்கிறதா? அப்படியே பெற்றாலும், அது தலித் மக்கள் மீது அப்பிக்கிடக்கும் சாதி அசிங்கத்தைத் துடைத்துவிடுமா? மக்களுக்கு இந்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய தலித் தலைவர்களும், இயக்கவாதிகளுமே கோயில் உரிமைக்காகத்தானே குரல் கொடுக்கிறார்கள்! இந்து மதத்தை விட்டு வெளியேறச் செய்வதற்கான துணிவையோ அறிவையோ மக்களுக்கு கற்பிக்க வில்லை என்பது வருத்தத்திற்குரியது.

கோயிலுக்குள் தலித் மக்கள் நுழைந்தால் தீட்டு, பாவம், சாமி கண்ணைக் குத்திவிடும் என்று பூச்சாண்டி காட்டிக் கொண்டிருந்தவர்களின் முகமூடியைக் கிழித்தெறிந்தார் பெரியார். அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராக வேண்டுமென அவர் வலியுறுத்தியதன் நோக்கம்கூட, சமத்துவத்தை மீட்டெடுப்பதுதானே அன்றி மத உரிமைகளைப் பாதுகாப்பதன்று. அதே நேரம், அதற்கு இணையாக அதைவிட உக்கிரமாக அவர் இந்து மத எதிர்ப்பையும், கடவுள் மறுப்பையும், தமிழர்கள் இந்துக்கள் அல்ல என்பதையும் வலியுறுத்தி, அதிதீவிரமான பிரச்சாரத்தை மேற்கொண்டார். இந்த விஷயத்தை நாம் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது.


அம்பேத்கரை தன்னிகரில்லாத் தலைவராக ஏற்றுக் கொண்டிருப்பவர்கள்கூட, சாதி ஒழிப்புக்குத் தீர்வாக அவர் முன்மொழிந்த மதமாற்றத்தையும், இந்துமத எதிர்ப்பையும் மக்களிடம் முழு வீச்சில் எடுத்துச் செல்லவில்லை. மாறாக, தங்களை அடிமைப்படுத்தி வைத்திருக்கும் இந்து மதத்திடம் உரிமைகளைக் கேட்டு காலம் முழுவதும் போராடிக் கொண்டிருக்கிறார்கள். கேடுகெட்ட இந்து மதத்தின் வெற்றி அதுதான். மதம் என்பது போதை என்றால் இந்து மதம் என்பது அதிபோதை. இத்தனை கோடி மக்களை இத்தனை ஆண்டுகளாக ‘நாங்கள் அடிமைகள்தான்' என்று நம்பி ஏற்றுக் கொள்ள வைக்கும் அளவுக்கு அதிபோதை. அதிலிருந்து தெளிந்து வெளியேறுவதென்பது, உண்மையிலேயே மிகப் பெரிய சாதனை. ‘உரிமை வேண்டும்' என்று தன்னெழுச்சி பெற்றிருக்கும் கண்டதேவி மக்களே அந்த சாதனையைத் தொடங்கி வைக்கலாம்.

கண்டதேவியிலிருந்து இரண்டு கிலோ மீட்டர் தொலைவே இருக்கும் கீழ செம்பொன்மாரி மக்கள் தேர்வட உரிமைக்காக உயிரைவிடவும் தயாராக உள்ளனர்: "எப்படியாவது தேர இழுத்துரணும்னுதான் கிளம்புனோம். போலிசுங்க வழி மறிச்சு ஊரோட அடைச்சு வச்சுட்டாங்க. கள்ளரா, பள்ளரானு கேட்டுத்தான் கண்டதேவிக்குள்ள விட்டாங்க. எஸ்.சி.னா அவ்ளோ எளக்காரமா? போலிசு வந்தது பாதுகாப்புக்காம். எத பாதுகாக்குறதுக்கு ஜாதியவா? காக்கிச் சட்டையப் பார்த்தாலே வெறுப்புத்தான் வருது. அவங்க மட்டும் இல்லனா நாங்கதான் தேர இழுத்திருப்போம்.

மனுசங்கள்ல ஆண் ஒரு ஜாதி, பொண்ணு ஒரு ஜாதினு ரெண்டே பிரிவு தாங்க. இது ஏன் அவங்களுக்கு புரிய மாட்டேங்குது. சாமி சொல்லுச்சா தலித்துங்க தேர இழுக்கக் கூடாதுணு. நாங்க விடுறதா இல்ல... எங்க உசிரு சிந்துனாலும் அங்கதான் சிந்தும்'' என்கிறார்கள் கொதித்துப் போய்.

மதத்துக்காக மக்கள் ஏன் உயிரை விட வேண்டும்? மக்களுக்காகத்தான் மதம். உணர்வுகளையும், நம்பிக்கைகளையும் உரிமைகளையும் பாதுகாக்க வேண்டியது ஒன்றே மதங்களின் கடமை. அந்த ஜனநாயகக் கடமையிலிருந்து மதங்கள் முரண்படும்போது, அதை துச்சமென மதித்து வெளியேறினால்தான் உரிமை மீறல்கள் தடைபடும். மக்களை அதற்குத் தயார்படுத்த வேண்டியதுதான் இன்றைய முக்கியத் தேவை.



"கண்டதேவி கள்ளர்கள் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் பாய வேண்டும்?'' "இரு தரப்பினரும் விட்டுக் கொடுத்துப் போக வேண்டும்'' "தலித் மக்கள் தன்னெழுச்சியாக போய் தேர்வடத்தைப் பிடிக்க வேண்டும்'' "சாதி என்பது ஒரே நாளில் தீரக்கூடிய பிரச்சனை அல்ல... காத்திருங்கள்'' என்று ஒவ்வொரு தரப்பினரும் ஒவ்வொரு தீர்வை முன்மொழிகின்றனர். உண்மையாகவே இவை எல்லாம் சாதி ஒழிப்புக்கான தீர்வுகளா? கண்டதேவியில் போராடி தேர்வட உரிமையைக்கூட நாம் ஒரு வேளை பெற்றுவிடலாம். அதன் பிறகு, தலித் மக்கள் புனிதமானவர்கள் என்று மநுதர்மம் மாற்றி எழுதிவிடப் போகிறதா என்ன? நிச்சயமாக இல்லை. அப்போதும் ஜாதி இருக்கத்தான் போகிறது. வெவ்வேறு வடிவங்களில் அது தலித் மக்களை பலிவாங்கத்தான் போகிறது.

எத்தனையோ போராட்டங்களை நடத்திப் பார்த்து தோற்றுவிட்ட கண்டதேவி தலித் மக்கள், இன்னும் கையிலெடுக்காத வலுவான யுதம் மதமாற்றம் ஒன்றுதான். ஒரேயொருமுறை அதை அவர்கள் கையிலெடுக்கட்டுமே?! கள்ளர்களை தரிக்கும் இதே அரசு, தலித் மக்கள் முன் மண்டியிடும். சாதி இந்துக்கள் கலவரமடைவார்கள். இந்து மதவாதிகள் நடுக்கமடைவார்கள். சர்வதேச பத்திரிகைகளும், தொலைக்காட்சிகளும்கூட ஓடோடி வரும். "ஒரே நாளில் சாதியை அழித்துவிட முடியாது'' என்று அண்மையில் தீர்ப்பளித்த நீதிமன்றத்திற்கு, ஒரே நாளில் சாதியை அழித்துக் காட்டி வரலாற்றில் இடம் பிடிப்பார்கள் கண்டதேவி தலித் மக்கள்.

வறுமை நிலை தலித்தல்லாதோரை தலித் குடியிருப்பில் வசிக்கச் செய்திருக்கிறது.

தமிழ்நாட்டிலுள்ள மாநகரங்களில் ஒன்றான திருநெல்வேலியின் மற்றொரு பெயர் நெல்லை. நெல்லை என்றால் தின்பண்டப் பிரியர்களுக்கு ஞாபகம் வருவது அல்வா.

எழுத்தாளர்களுக்கு சாகித்திய அகடெமி விருது பெற்ற தொ.மு.சி ரகுநாதன், வல்லிக் கண்ணன் மற்றும் ரா.பி. சேதுப்பிள்ளை ஆகியோர் நினைவுக்கு வருவர்.

தலித் மற்றும் இடதுசாரி இயக்கங்கள், ஆய்வாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் போன்றோருக்கு தாமிரபரணி படுகொலை, சாதி மோதல் போன்றவையே ஞாபகத்திற்கு வரும். ஆனால் இவற்றினைத் தாண்டியும் திருநெல்வேலி இருக்கிறது. இதை திருநெல்வேலிக்கு உள்ளும் வெளியேயும் வசிப்பவர்கள் அறிந்திருப்பதற்கான வாய்ப்பு இல்லை.

நாம் அறிந்திராத திருநெல்வேலியை கோடிட்டுக் காட்டுவதற்கு முயற்சிக்கிறேன். திருநெல்வேலி மாநகராட்சியின் மொத்தமுள்ள

55 வார்டுகளில் 130 குடிசைப் பகுதிகளில் அலைந்து திரிந்ததன் விளைவாகவே நாம் அறிந்திராத திருநெல்வேலியை தெரிந்து கொள்ள முடிகிறது. குடிசைப் பகுதிகளில் வறுமை மற்றும் வாழ் வாதார நிலைகளைக் கணக்கெடுப்பதற்கான பணியில் ஈடுபட்டோம்.

இப்பணிக்குத் தேவையான நிதியினை திருநெல்வேலி மாநகராட்சி கொடுத்தது. மனோன் மணியம் சுந்தரானர் பல்கலைக் கழகத்திலுள்ள சமூக விலக்கல் மற்றும் உட்கொணர்வு கொள்கை ஆய்வு மையத்தின் இணை இயக்குநர்கள் பவனந்தி வேம்புலு, புவனேஸ்வரன் மற்றும் அலமேலு மங்கை இணை ஆராய்ச்சியாளர் ரகுபதி, வரலாற்றுத் துறை இணைப் பேராசிரியர் வினோத் வின்சென்ட் ராஜேஸ் ஆகியோரும், தமிழ், வரலாறு, பொருளாதாரம், சமூகவியல், தொடர் பியல், புள்ளியியல் மற்றும் விலங்கியல் ஆகிய துறைகளைச் சேர்ந்த முதுகலை மாணவர்கள், இளம் முனைவர் மற்றும் முனைவர் பட்ட ஆராய்ச்சி மாணவர்கள் சுமார் 70 பேர்கள் ஏப்ரல் முதல் ஜூன் வரை 2010 காலை எட்டு மணி முதல் மாலை 8 மணி வரை கணக்கெடுப்புப் பணியில் ஈடுபட்டோம்.

கணக்கெடுப்புப் பணிக்கான திட்டம் மற்றும் ஒப்பந்தம் போன்ற ஆரம்ப கட்ட பணி களில் ஈடுபட்ட புவனேஸ்வரன் மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில் சமூகவியல் துறைக்கு இணைப் பேராசிரியராக தேர்வு செய்யப்பட்ட காரணத்தினால் கணக்கெடுப்புப் பணியில் அவரால் ஈடுபட முடியாமல் போய்விட்டது. இதனால் அவர் வருத்தப்படவும் செய்தார்.

மாநகராட்சி என்றால் பெரியநகரம் என்று பொருள். எண்ணற்ற பெரும் தொழிற்சாலைகள், முக்கிய அலுவலகங்கள், முதலாளிகள் மற்றும் நடுத்தவர்க்கம், கூலித் தொழிலாளிகள் போன் றவை மாநகரத்தின் குறியீடுகள். ஆனால் திருநெல் வேலி மாநகாரட்சியில் அரிதாக ஒருசில தொழிற் சாலை மட்டுமே உள்ளன.

பெருமாள்புரம், என்.ஜி.ஓ. காலனி, பால பாக்கிய நகர், கே.டி.சி. நகர் என ஒருசில நடுத்தர வர்க்க குடியிருப்புகளே இருக்கின்றன. இந்த நடுத்தர வர்க்க குடியிருப்புகளிலும்கூட சில குடியிருப்பின் சில பகுதிகள் சாதி வாரியாகவே இருக்கிறது. இந்த மாநகராட்சியில் சேரிகள் என்ற வகைப்பாட்டிற்குள் பெரும்பாலும் தலித் குடி யிருப்புகளே இருக்கிறது. பெரும்பாலான தலித் குடியிருப்புகள் அடிப்படையில் கிராமங்களே. பெரும்பாலன கிராமங்களில் தேவேந்திரர்களும் (பள்ளர்), இவர்களைவிடவும் குறைவான எண்ணிக்கையில் பறையர் சாதியினரும் வசிக் கின்றனர். தாமிரபரணியின் ஆற்றுக் கரையோரங் களிலும் ஒருசில குடிசை மாற்றுவாரிய குடி யிருப்புகளிலும் அருந்ததியர்கள் மிகுதியாக வசிக் கின்றனர். இவர்களுக்கு அடுத்த நிலையில் எண்ணிக்கையில் குறைவாக மலைக் குறவர்கள் வசிக்கின்றனர். தலித்தல்லாதோர் வசிக்கின்ற பகுதிகளும் ‘சேரி’ என்ற வகைப்பாட்டிற்குள் வருகிறது.

இந்த குடிசைப் பகுதிகளில் முதலில் இரண்டு பகுதிகளில் சோதனைக் கணக்கெடுப் பினை மேற்கொண்டோம். இவைகள் அருந்ததியர் மற்றும் குறவர் வசிப்பிடங்களாகும். மாநகாரட்சி எங்களிடம் கொடுத்திருந்த சம்பந்தப்பட்ட குடிசைப் பகுதிகளுக்கான வரைபடத்தினைக் கொண்டு அப்பகுதியின் எல்லைகளை அடை யாளம் காண்பதற்கு கடும் சிரமப்பட்டோம். காரணம் இவ்வரைபடம் 1980களில் வரையப் பட்டது.

சுமார் 30 வருடங்கள் கழித்து கணக் கெடுப்புப் பணியில் ஈடுபட்டோம். வீடுகளின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. பல மரங்கள் அழிக்கப்பட்டுவிட்டது. சிறு கால்வாய் சாக்கடை யாக மாற்றப்பட்டிருக்கிறது. குடிசைப் பகுதிகளைச் சுற்றிலும் பெரும் வீடுகள் தோன்றியிருக்கிறது, குடிசைப் பகுதிக்குள் அல்ல. இதனால் குடிசைப் பகுதியினை எல்லைகளை மிகச் சரியாக அடையாளப்படுத்துவதில் சிக்கல் இருந்த போதி லும் அதில் வெற்றியடைந்தோம்.

சோதனை கணக்கெடுப்பிற்குப் பின்னர் தொடர்ச்சியான கணக்கெடுப்புப் பணியில் ஈடு பட்டோம். முதலில் மாவட்ட ஆட்சியர் வளாகத் திற்குப் பின்பகுதியிலுள்ள கொக்கிரகுளம் என்ற பகுதியில் கணக்கெடுத்தோம்.

தாமிரபரணி படுகொலை நடந்த பகுதியைக் கடந்துதான் இப்பகுதிக்குச் செல்ல வேண்டும். இங்கு அதிக எண்ணிக்கையில் தேவேந் திரர்களும் குறைந்த எண்ணிக்கையில் பறையர்களும் வசிக் கின்றனர். எங்களுக்குத் தரப்பட்ட குடிசைப் பகுதி பட்டியலில் பறையர்களின் தெரு இடம் பெற்றி ருக்கவில்லை எனவே, அங்கு நாங்கள் கணக்கு எடுக்கவில்லை. கொக்கிரக்குளம் தேவேந்திரர் பகுதியில் கணக்கெடுத்த பொழுது அவர்களிடத்தில் பலரும் படித்து அரசுப் பணியில் இருப்பதனைக் காணமுடிந்தது. தொலைபேசித் துறையில் ஒப்பந்த அடிப்படையில் குழி தோண்டும் பணியில் ஈடு பட்டிருந்த பல தேவேந்திரர்கள் பின்னர் பணி நிரந்தரம் செய்யப்பட்டிருந்தனர். இதனால் இவர்களின் வாரிசுகள் எளிதாக கல்வி கற்று அரசுப் பணியில் சேரமுடிந்திருக்கிறது. மேலும் இங்குள்ள இளைஞர்கள் போட்டித் தேர்வில் வெற்றி பெற்று அரசுப் பணிக்கு சென்றுவிட வேண்டும் என்ற இலக்கினைக் கொண்டு படிக்கின்றனர். இந்த கடினமான உழைப்பே கொக்கிரகுளம் தேவேந்திரர் களுக்கு முன்னேற்றத்தைக் கொடுத்திருக்கிறது. என்னதான் பொருளாதாரத்தில் முன்னேற்றமடைந் திருப்பினும் அவர்கள் குடிநீருக்காக அல்லல்பட வேண்டிய சூழல் இருந்து கொண்டிருக்கிறது.

நாங்கள் கணக்கெடுத்துக் கொண்டிருந்த மாலைநேரத்தில் மக்கள் குடங்களுடன் ஓடோடிச் சென்றனர், அங்கு வந்துநின்ற வாகனத்தில் தண்ணீர் பிடிப்பதற்காக. தமிழகத்தின் வற்றாத ஜீவநதியாக ஓடிக்கொண்டிருக்கும் தாமிரபரணி ஆற்றிற்கும் கொக்கிரகுளத்திற்கும் பெருத்த இடைவெளி இல்லை, இருப்பினும் அங்கு குடிநீர் இல்லாதது அதிர்ச்சியையே தந்தது.

அடுத்த நாள் நாங்கள் மனகாவலம் பிள்ளை நகருக்குச் சென்றோம். சுமார் இரண்டாயிரம் வீடுகள் இருக்கும் இப்பகுதியில் பலரும் நடுத்தர வர்க்கத்தினைச் சேர்ந்தோரே. ஆனால் இது ஒரு குடிசைப்பகுதியாகும். அதிக எண்ணிக்கையில் பிற்படுத்தப்பட்ட சாதியினைச் சேர்ந்த மக்கள் வசிக் கும் இப்பகுதி அரசு புறம்போக்கு ஆகும். அரசுப் பணியிலிருக்கும் நடுத்தர வர்க்கத்தினைச் சேர்ந்த பலரும் தங்களின் உண்மையான வருமானத்தை கூற மறுத்துவிட்டனர்.

இப்பகுதியில் ஒரு முக்கியமான தரவு கிடைத்தது. தமிழகத்தில் தோல் பொருட்கள் உற்பத்தி செய்யும் தொழிலில் ஈடுபட்டிருப்பது அருந்ததியர் மட்டுமே என்று பலரும் நம்பிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் அருந்ததியர்களுக்கு முன்னபிருந்தே தோல் பொருட்கள் உற்பத்தி செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றன செம்மான் என்ற சாதியினரை காணமுடிந்தது. இவர்கள் குறித்த பதிவு சங்க இலக்கியங்களில் இருக்கிறது என்பது இவ்விடத்தில் நினைவு கூறத்தக்கது.

மகிழ்வண்ணநாதபுரம் குறவர்கள் வசிக்கும் பகுதியாகும். இவர்கள் மலைக் குறவர்கள் ஆவர். இன்றைய திருநெல்வேலி மாவட்டத்தில் குற்றாலம் அருகே இருக்கும் செங்கோட்டை பகுதியிலுள்ள மலைப்பகுதிகளில் இவர்கள் வசித்த வந்தனர். இது அன்றைய திருவாங்கூர் சமாஸ் தானத்தில் இருந்தது. செங்கோட்டை மலைப் பகுதியில் கிடைத்த மூங்கில் மூலம் கூடை உற்பத்தி செய்து தங்களின் பிழைப்பினை நடத்தி வந்தனர். அரசாங்கத்தின் கொள்கை இத்தொழிலுக்கு முற்றுப் புள்ளி வைத்தது. இதனால் பிழைப்புத் தேடி திருநெல்வேலிக்கு வந்தனர். மலைப் பகுதியிலிருந்து தரைப் பகுதிக்கு இடம்பெயர்ந்து வந்த காரணத்தினால் அரசாங்கம் இவர்களை பழங்குடியினர் என்று அங்கீகரிப்பதற்கு மறுக்கிறது. மரபு ரீதியான தொழிலுக்கு வேட்டு வைத்த அர சாங்கம் பழங்குடியினர் சான்று தர மறுப்பதனால் கல்வி கற்க முடியாத நிலையும் இருக்கிறது. இதனால் பிறரை அண்டி பிழைக்க வேண்டிய நிலையில் இருக்கின்றனர். சிலர் குறவன் குறத்தி ஆட்டம் ஆடுவதற்குத் தள்ளப்பட்டிருக்கின்றனர்.

நெல்லை மாநகராட்சியில் மிகவும் மோச மான நிலையில் அருந்ததியர்களின் வாழ்க்கை இருப்பதை அறிந்து கொள்ள முடிந்தது. செங்கற் களை அடிக்கி வைத்தாற்போல் அவர்களின் வீடுகள், ஒற்றையறைகள், சுகாதரமற்ற சூழல் போன்றவை. இத்தகைய குடியிருப்புகள் நெல்லை யில் இருக்கிறதா என்று எங்கள் புருவத்தை உயர்த்த வைத்தது. இக்குடியிருப்புகளின் அவலநிலை பேருந்திலோ அல்லது இதர வாகனங்களில் பயணிக்கும் பொழுது காண்பதற்கான வாய்ப்பு இல்லை. அப்பகுதிகளுக்குள் சென்றால் மட்டுமே அந்த அவலத்தைக் காண இயலும்.

இப்பகுதியில் அருந்ததியர் ஒருவரிடம் புள்ளி விவரங்களைச் சேகரித்துக் கொண்டிருந் தேன். அவரருகே அவருடைய சுமார் 6வயதுடைய பேரன் இருந்தான். அவரிடம் ஒவ்வொரு கேள்வி யாக கேட்டுக் கொண்டிருதேன் அவரும் பதில் கூறிக் கொண்டிருந்தார்.

நீங்கள் என்ன தொழில் செய்கிறீர்கள் என்று வினவினேன். அவர் பதில் சொல்வதற்குள் அவருடைய பேரன் சொன்னான்:

“இவன் குப்பை அள்ளுதான்”.

மீண்டும் அச்சிறுவன் தொடர்ந்தான், ‘’ஏன் தாத்தா உனக்கு வேறு வேலையே கிடைக்க வில்லையா? போயும் போயும் குப்பை அள்ளு கிறாயா” என்று சினம் கொண்டான்.

அச்சிறுவனின் தாத்தாவிடமிருந்து சிறு புன்னகையைத் தவிர வேறு பதில் இல்லை. சில பகுதிகளில் அருந்ததியர்களுக்கென அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டிக் கொடுக்கப்பட்டிருக்கிறது.

நெல்லை சந்திப்பிற்கு வந்து விட்டு நான் வசிக்கும் பகுதிக்கு நகரப்பேருந்தில் அவ்வப் பொழுது பயணிப்பதுண்டு. அப்பேருந்தில் ஒரு முதியவரும் அவ்வப்பொழுது வருவார். அவரை நான் பல நாட்கள் அப்பேருந்தில் கண்டிருக்கிறேன். அவர் அருந்ததியர்களின் அடுக்குமாடி குடியிருப் பினை கடக்கும் பொழுது இவ்வாறு கூறியதனை நான் கேட்டிருக்கிறேன்:

“சக்கிலியப் பயலுகளுக்கு அடுக்குமாடி”.

இக்கணக்கெடுப்பின்போது அவ்வடுக்கு மாடி களுக்கு சென்றபோதுதான் தெரிந்தது அங்கு வசிப்பது கடினம் என்பது. ஆனால் அந்த முதிய வருக்கு இது தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

சேவைச் சாதிகளான புதிரை வண்ணார், வண்ணார் போன்றோர் பகுதிகளில் கணக்கெடுத்த பொழுது இளம் வயதுடைய பலரின் தலைமயிரும் நரைத்திருப்பதனைக் காணமுடிந்தது. ஏன் இவ்வாறு நரைத்திருக்கிறது என்று வினவிய பொழுது அது வெளுப்பு வேலையினால் விளைந் திருக்கிறது என்பதை அறிந்து கொள்ள முடிந்தது. வெளுக்கும் போது தெறிக்கும் காரம் அவர்களின் தலைமயிரை நரைக்கச் செய்திருக்கிறது.

பழையபேட்டையில் ஒரு தெருவில் வசிக் கும் வண்ணார்கள் வெள்ளாளர்களுக்கு வேலை செய்துவந்த பிரிவினர் ஆவர். இவர்களுக்கு பணிக்கர் என்ற பெயரும் உண்டு. இவர்களிடம் கணக்கெடுத்த பொழுது ஒரே ஒரு பெண்ணைத் தவிர பிற யாரும் ஐந்தாம் வகுப்பு வரைகூட படித்திருக்கவில்லை. இப்பெண்ணும்கூட வேறு ஊரைச் சேர்ந்தவர், அவரை இங்கு திருமணம் செய்து கொடுத்திருக்கின்றனர். அவர்களிடம் நீங்கள் எந்த பிரிவின் கீழ் வருகிறீர்கள்? என்ற கேள்வியை எழுப்பினேன். அதற்கு அவர்களிட மிருந்து பதில் இல்லை. அது, மட்டுமின்றி நான் கேட்ட கேள்வியைக்கூட அவர்களால் விளங்கிக் கொள்ள முடியவில்லை. அவர்கள் படித்திருந்தால் சாதிச் சான்று வாங்கியிருக்கக்கூடும், எந்த பிரிவின் கீழ் வருகிறோம் என்பதையும் அறிந்திருப்பர். ஆனால் குலத்தொழிலில் முடங்கிக் கிடக்கும் அவர்களால் கல்வி கற்க இயலாத நிலையில் உள்ளனர். அவர்களின் வீடோ ஒரே ஒரு அறையை மட்டுமே கொண்டிருக்கிறது. அதற்கு கதவு இல்லை, கிழிந்துபோன சீலைதான் கதவு.

வறுமை நிலை சிலரை சாதியின் இறுக்கத் தினை தளர்த்த வைத்திருக்கிறது என்பதைக் காண முடிந்தது. சாதிய சமூகத்தில் ஒவ்வொருவரும் அவரவர் சாதிய குடியிருப்பிலேயே வசிக்கின்றனர். அதிலும் குறிப்பாக தலித்தல்லாதோர் தலித் குடியிருப்பில் பொதுவாக வசிப்பதில்லை. ஆனால் வறுமை நிலை தலித்தல்லாதோரை தலித் குடியிருப்பில் வசிக்கச் செய்திருக்கிறது. பள்ளர், பறையர், குறவர் தெருக்களில் நாடார், தேவர், ஆசாரி, செட்டியார் போன்ற சாதியினர் வசிப்பதை கணக்கெடுப்பின் பொழுது அறிந்து கொள்ள முடிந்தது. இதில் சிலர் தங்களின் சாதிய அடை யாளத்தினை வெளிப்படையாக காட்டிக் கொண் டும் சிலர் அதனை மறைத்துக் கொண்டும் வாழ்ந்து வருவதனைக் காணமுடிந்தது.

லட்சுமிபுரம் என்ற பள்ளர் குடியிருப்பில் நான் கணக்கெடுத்த பொழுது சாதி குறித்த கேள்விக்கு தாழ்த்தப்பட்டோர் என்று அவர்கள் கூறினால் பள்ளர்தானே? என்று கேட்டேன். அவ்வாறு ஒரு பெண்மணியிடம் பள்ளர்தானே என்று கேட்ட பொழுது உடனடியாக அவர் இல்லை நான் தேவர் என்று பதிலளித்தார். சுற்றியிருந்த பல பள்ளர் பெண்களும், தேவர் என்று கூறிய பெண்ணும் ஒரு நிமிடம் அமைதியாகி விட்டனர். பின்னர் ஒரு பள்ளர் பெண் அக்கா நீங்க தேவராக்கா? எங்களுக்கு இதுவரை தெரியாதே என்றார். அத்தேவர் சாதிப் பெண் புன்னகைத்தார்.

என் கேள்வியின் மூலம் வெளிப்படையாக தெரிந்துவிட்ட சாதி அடையாளம் அவர்களுக்குள் சிக்கலை விளைவித்துவிடுமோ என்ற கேள்வி நான் அப்பகுதியினைவிட்டு வெளியே சென்ற பின்னர் எனக்குள் எழுந்தது. மீண்டும் அப்பகுதிக்குச் சென்று ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று கருதினேன். காரணம் இதே பகுதியில் தேவர் மட்டுமின்றி செட்டியார், நாடார் ஆகிய சாதி யினைச் சேர்ந்தோரும் ஒரு சில குடும்பங்கள் வசித்து வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டத் தில் பொதுவாக தலித்தல்லாதோர் தலித் குடியிருப் பிலோ அல்லது தலித்துகள் தலித்தல்லாதோர் குடி யிருப்பிலோ வசிப்பதில்லை. ஆனால் நெல்லை மாநகராட்சியில் தலித் பகுதியில் எவ்வாறு தலித்தல்லாதோர் வசித்து வருகின்றனர்? அவர்களுக் கிடையேயான சமூக உறவு எவ்வாறு இருக்கிறது? என்பது போன்ற கேள்விகள் எனக்குள் எழுந்தன. அக்கேள்விகளுக்கான பதிலைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று விரும்பினேன்.மீண்டும் அப் பகுதிக்கு செல்ல வேண்டும் என்று முடிவு செய் தேன்.

இச்சூழலில் அப்பகுதியில் விடுபட்ட வீடுகளைக் கணக்கெடுப்பதற்குச் சென்ற பொழுது அத்தேவர் சாதிப் பெண்மணியை சந்தித்து உரை யாடினேன். “இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த அவர் தன் கணவர் மற்றும் மாமியாரோடு பள்ளர்களின் கிராமமான லட்சுமிபுரத்தில் வசித்து வருகிறார். கணவர் ஹோட்டல் ஒன்றில் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். மற்ற சாதியினர் வசிப்பிடத்திற்குச் சென்றால் அங்கு வாடகை அதிகமா இருக்கும், இங்கு குறைவாக இருப்பதனால் இங்கு இருக்கிறோம். நாங்கள் உழைக்கிறோம் வாழ்கிறோம். வேறு எந்த பிரச் சினையும் எங்களுக்கு இல்லை என்றார் அப் பெண்மணி.

“நாங்கள் உழைக்கிறோம் வாழ்கிறோம்” என்ற கூற்றில் பல பொருட்கள் பொதிந்துள்ளன. சுரண்டல், ஆதிக்கம் செலுத்துதல் போன்ற வற்றினை தாங்கள் செய்வதில்லை என்பதும் அதில் அடங்கியுள்ளன.

தென் மாவட்டங்களில் பள்ளர்களுக்கும் தேவர்களுக்கும் இடையே நடைபெற்ற மோத லுக்குப் பின்னர் இரண்டு சாதியினரும் ஒருவருக் கொருவர் பேசிக்கொள்வதில்லை, இச்சூழல் இன்றும் தொடர்வதனைக் காணமுடிகிறது. ஆனால் பள்ளர் குடியிருப்பான லட்சுமிபுரத்தில் எவ்வாறு தேவர், செட்டியார், நாடார் ஆகியோர் இணக்கமான உறவுடன் வாழ்ந்து வரமுடிகிறது என்றால் சமூகத்தில் பள்ளர்களுக்கு மேல்நிலை யிலிருக்கின்ற அவர்கள் தங்களின் ஆதிக்கத்தினை எவ்விடத்திலும் எச்சமயத்திலும் வெளிப்படுத்தி யிருக்காதது அவர்களுக்குள்ளான இணக்கத்திற்குக் காரணமாகும். இது குறித்த ஆழமான ஆராய்ச்சி தேவை.

இந்த கணக்கெடுப்பில் ஈடுபட்ட மாணவர் களுக்கு இது ஒரு புதிய அனுபவமாக இருந்தது. மாணவர்கள் பெரும்பாலும் கிராமப் புறத்தினைச் சேர்ந்தவர்கள், சிலர் நடுத்தர வர்க்கத்தினைச் சேர்ந்தவர்கள். ஆனால் இந்த கணக்கெடுப்பின் போது அவர்கள் இவ்வாறு ஒரு அவலமான உலகம் இருக்கிறதா என்பதை உணர்ந்திருக் கின்றனர். வறுமை எவ்வாறு இருக்கும் என்பதை அவர்கள் நேரில் கண்டறிந்தனர்.

மாணவிகள் புள்ளி விவரங்கள் சேகரிக்கும் பொழுது சிலர் தங்களின் வறுமையினை கூறி அழுது புலம்பியிருக்கின்றனர். இந்த அவலம் மாணவிகளிடத்தில் கண்ணீரை வரவழைத் திருக்கிறது.

கட்டாந்தரையில் நான்கு குச்சிகளை நட்டு அதில் கிழிந்த பிளாஸ்டிக் தாளைக் கொண்டு வீடு அமைத்து அதில் வாழ்ந்து வருகின்ற குழுவர் சாதியைச் சேர்ந்த ஒரு குடும்பத்தில் கணக்கெடுத்த பொழுது தனக்கு கண்ணீர் வந்துவிட்டது என்றார் கௌதமி என்ற மாணவி.

கணவனை இழந்தோர், ஆதரவற்றோர் போன்றோரின் வறுமை தங்களை நிலைகுலையச் செய்ததாக மாணவிகள் கூறிய பொழுது வகுப்பறை பாடம் எதையும் கற்றுக் கொடுத்து விடாதோ என்ற கேள்வியே எனக்குள் எழுந்தது. வறுமையினால் பாதிக்கப்பட்ட மக்களைக் கண்டு எந்த அளவிற்கு மாணவிகள் பாதிப்படைந்தனரோ அந்த அளவிற்கு நடுத்தர வர்க்கத்தினர் மீது அவர்களுக்கு கோபமும் வந்திருக்கிறது.

தலித்துகளுக்கு வழங்கப்பட்ட நிலம் நடுத்தர வர்க்கத்தினரால் வாங்கப்பட்டிருக்கிறது. ஆனால் அப்பகுதி குடிசைப் பகுதியே! அங்கு மாணவிகள் கணக்கெடுத்த பொழுது நடுத்தர வர்க்கத்தினர் ஆணவத்தோடும் அதிகாரத்தோடும் பதிலளித் திருக்கின்றனர். இது அவர்கள் மீது மாணவிகளுக்கு வெறுப்பை உண்டாக்கியது. எனவே, மாணவிகள் தயவு செய்து நடுத்தர வர்க்கப் பகுதிகளுக்கு எங்களை அனுப்பாதீர் என்று முறையிட்டனர்.

ஒட்டுமொத்தமாக குடிசைப் பகுதி கணக் கெடுப்பிலிருந்து சில உண்மைகளைப் புரிந்து கொள்ள முடிந்தது. தென்னிந்தியாவின் ஆக்ஸ் போர்டு என்று திருநெல்வேலியை அழைப் பதுண்டு. ஆனால் இம்மாநகராட்சியில் பெரும் பாலான தலித்துகள் கல்வி கற்காமல் இருக் கின்றனர். இவர்கள் விவசாயக் கூலி, கட்டிடத் தொழிலாளி, துப்புரவுப் பணி போன்ற வேலை களை நம்பியே இவர்களின் அன்றாட பிழைப்பு நகர்ந்து கொண்டிருக்கிறது. மாநகராட்சிக்குள் இருந்தபோதிலும் இவர்களின் வாழ்க்கை முன் னேற்றம் அடைந்துவிடவில்லை. உண்மையைக் கூறினால் மாநகராட்சிக்குள் இருக்கின்ற காரணத் தினால் பல நலத்திட்டங்கள் இவர்களுக்கு மறுக்கப்படுகிறது.

எனவே, மாநகராட்சி அல்லாத பகுதிகளில் வசிக்கும் தலித்துகளின் நலனுக்காக அமுல்படுத்தப் படும் திட்டங்கள் அனைத்தும் மாநகராட்சிக்குள் வசிக்கின்ற பகுதிக்கும் அமுல்படுத்தப்பட வேண் டும். இது ஒரு சிறிய முன்னேற்றத்திற்கு வழி வகுக்கும். திருநெல்வேலி மாநகராட்சியில் அனைத்து தலித்துகளும் கூலிகளாகவா வாழ்ந்து வருகின்றனர் என்ற வினவக்கூடும்.

இங்கு கணிசமான எண்ணிக்கையில் தலித் நடுத்தர வர்க்கம் இருக்கிறது. ஆனால் இவர்கள் பெரும்பாலும் திருநெல்வேலியோடு இணைக்கப் பட்டிருந்த பாரம்பரிய கிராமத்தினைச் சேர்ந்தவர் கள் அல்ல, அவர்கள் வெளியூர்களைச் சேர்ந்தவர் கள். குறவர் சாதியினரைப் பொறுத்த மட்டிலும் ஒருசிலரே கல்வி கற்று அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரிந்து வருகின்றனர். இட ஒதுக்கீடு, அரசாங்கத்தின் நலத்திட்டங்கள் போன் றவை திருநெல்வேலி மாநகராட்சிக்குள் இருக் கின்ற பாரம்பரியமான கிராமத்து மக்களின் முன்னேற்றத்திற்கு பெரிதும் உதவி புரிந்திருக்க வில்லை என்றே எண்ணத் தோன்றுகிறது.

கணக்கெடுப்பிற்கான கேள்வித்தாள் படிவத்தில் வியாபாரி மற்றும் சாலையோர வியபாரி குறித்த கேள்வி இடம்பெற்றிருந்தது. தலித்துகளிடத்தில் இத்தகைய வியாபாரிகள் இல்லை என்பதைத் தெரிவிக்கும் கோடு மட்டுமே மாணவர்கள் குறித்திருந்தனர். அது குறித்து விசாரித்து அக்கேள்விக்கான பதிலை எழுதவும் என்று மாணவர்களிடம் கூறினார் பவனந்தி வேம்புலு. மீண்டும் அதே பதில்தான் வந்தது.

ஏன் தலித்துகளிடத்தில் வியாபாரியோ சாலையோர வியாபாரியோ இல்லை என்ற கேள்வி எங்களுக்குள் எழுந்து கொண்டே இருந்தது. தலித் முதியவர் ஒருவர் இதற்கான காரணத்தைத் தெளிவாக இவ்வாறு கூறினார்: ‘’சாலையோர வியாபாரமோ அல்லது கடை நிறுவி வியா பாரமோ செய்ய வேண்டும் என்றால் அடிப்படை யில் அதற்கு சரக்கு வேண்டும். இதற்கு நிதி மூலதனம் வேண்டும். அது தலித்துகளிடத்தில் இல்லை. மொத்த சரக்கு விற்பனையாளர்களாக தலித்தல்லாதோர்தான் இருக்கின்றனர். எனவே, அவர்களிடம் கடனுக்காகக்கூட சரக்கு பெறுவது இயலாது. சாதிய அடையாளம் தெரியாமல் கடனுக்கு சரக்கு தருவது கிடையாது. சாதிய அடை யாளம் தெரிந்தால் தலித்துகளுக்கு எவ்வாறு அவர்கள் கடனுக்கு சரக்கு தருவார்கள்? ஒருவேளை அவ்வாறு தந்தாலும்கூட தலித்துகளிடம் யார் பொருட்கள் வாங்குவதற்கு முன்வருவார்கள். இதனால்தான் நாங்கள் வியாபாரம் செய்வ தில்லை” என்றார்.

இதனால் தலித்துகளிடத்தில் வியாபாரிகளே திருநெல்வேலி மாநகரத்தில் இல்லையா? என்ற கேள்வி எழும். நான் அறிந்தவரையில் ஒரேயொரு வர் இருக்கிறார். அவர் திருநெல்வேலி நகரத்தில் ஒரு கடை வைத்திருக்கிறார். சில ஆண்டுகளுக்கு முன்னர் அவரைச் சந்தித்தபோது அவர் இவ்வாறு கூறினார்: “நான் எனது சாதிய அடையாளத்தை மறைத்துக் கொண்டுதான் வியாபாரம் செய் கிறேன். நான் தலித் என்று தெரிந்தால் மொத்த வியாபாரிகள் சில்லறை விற்பனைக்கு சரக்கு தரமாட்டார்கள். அதனால்தான் நான் தலித்தல்லாத வேறு ஒரு சாதியாக (நாடார்) வாழ்ந்து கொண் டிருக்கிறேன்”.

இதே கருத்தினை நாவிதர் ஒருவரும் தெரிவித்தார். இவர் திருநெல்வேலி சந்திப்பு பகுதியில் கடை நடத்தி வருகிறார். அவர் நாடார் சாதியாக வாழ்ந்து வருகிறார்.

திருநெல்வேலி மாநகரத்தில் நான் அறிந்த வரையில் ஒடுக்கப்பட்ட சாதியினைச் சேர்ந்தவர்களில் இவ்விருவர் மட்டுமே வியாபாரிகள். திருநெல்வேலியில் தேவர்களுக்கும் தேவேந்திரர்களுக்கும் (பள்ளர்) மோதல் நடைபெற்றது போல் தேவர்களுக்கும் நாடார்களுக்கும் நடைபெற்றது. முன்னவர்களுக்கு இடையிலான சிக்கலுக்கு அடிப் படைக் காரணம் சமூக ஏற்றத்தாழ்வு.

பின்னவர் இருவர்களுக்கும் இடையில் யார் திருநெல்வேலி நகரத்தில் வியாபாரத்தைக் கைப் பற்றி ஆதிக்கம் செலுத்துவது என்பதே சிக்கல். இவ்விரண்டுக்கும் அடிப்படையிலேயே சாதிதான் சிக்கல். சாதி சமூகத்தின் சிக்கல்களில் ஒன்றல்ல அது அடிப்படையான சிக்கல்.

திருச்சியில் 25 ஆண்டாக இருந்த தீண்டாமை சுவர்

திருச்சி: திருச்சியில் போலீஸ் பாதுகாப்புடன் சர்ச்சைக்குரிய சுவர் நேற்று இடிக்கப்பட்டது. திருச்சி எடமலைப்பட்டிபுதூர் சக்திவேல் காலனியில் இருந்து பின்புறம் உள்ள முத்து மாரியம்மன் கோயில் தெருவுக்கு செல்லும் பாதையில் 150 மீட்டர் நீளம், 9 அடி உயரத்தில் சுவர் அமைக்கப்பட்டிருந்தது. இது தீண்டாமை சுவர். இதை இடிக்க வேண்டும் என்று கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம் நடத்தி கலெக்டரிடம் மனு அளித்தனர்.

அதே நேரத்தில் இந்த சுவர் தனியாருக்கு சொந்தமானது. இதில் போக்குவரத்து நடைபெறவில்லை என்று மனிதநேய மக்கள் கட்சியினர் தெரிவித்தனர். மேலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தென்காசி தொகுதி எம்பி லிங்கம், இந்த சுவரை பார்வையிட்டு தீண்டாமை சுவர் அல்ல என்று கூறினார்.

திருச்சி கலெக்டர் மகேசன் காசிராஜன் உத்தரவுப்படி, மாநகராட்சி ஊழியர்கள் நேற்று காலை சர்ச்சைக்குரிய அந்த சுவரை இடித்து போக்குவரத்துக்கு வழி செய்தனர். மாநகராட்சி தலைமை பொறியாளர் ராஜாமுகமது முன்னிலையில் சுவர் இடிக்கப்பட்டது. போலீஸ் துணை கமிஷனர்கள் ரூபேஸ்குமார் மீனா, தமிழ்ச்சந்திரன், உதவி கமிஷனர்கள் ஞானசேகரன், பழனிச்சாமி, சுந்தர்ராஜன் ஆகியோர் இருந்தனர். கமாண்டே பிரிவு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த மவுலானா கூறுகையில், ‘‘இது தீண்டாமை சுவர். சுவர் இருந்த இடம் தாழ்த்தப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டது. 89ம் ஆண்டு வரை இந்த இடம் புது அரிஜன தெரு என்றுதான் ரேஷன் கார்டுகளில் குறிப்பிடப்பட்டிருக்கும். பின்னர், திருத்தம் செய்யப்பட்டு முத்துமாரியம்மன் கோவில் தெரு என்று மாறியது.

சுவரை இடிக்கக்கோரி 25 ஆண்டாக போராடி வந்தோம். இந்த சுவரினால் 5 தெருவை சேர்ந்த மக்கள் ஒன்றரை கிமீ சுற்றி செல்ல வேண்டியிருந்தது. சுவர் இடிக்கப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது’’ என்றார். இடத்தின் உரிமையாளர் சம்சுகனி ராவுத்தரின் தம்பி மகன் அப்துல் ரஹ்மான் கூறுகையில், ‘‘சுவர் இடிக்கப்பட்டது பற்றி மதுரை உயர்நீதிமன்றத்தில் ரிட்மனு தாக்கல் செய்ய உள்ளோம்‘‘ என்றார்.

தமிழக வரலாற்றில் மருத நில உழவர்களான தேவேந்திர குல மள்ளர்

சித்திரையில்தான் புத்தாண்டு
எஸ். ராமச்சந்திரன்

இக் கட்டுரை முற்ற முழுக்க ஒரு வரலாற்று ஆய்வே. சித்திரை மாதம் முதல் தேதியன்று பிறக்கின்ற புத்தாண்டைத் தமிழ்ப் புத்தாண்டு என்று குறிப்பிடுவது சரியா என்ற ஒரு விவாதம், கடந்த நூற்றாண்டில் தமிழறிஞர்களிடையே எழுந்தது. சித்திரையை முதல் மாதமாகக் கொள்ளும் காலக்கணக்கீடோ, அறுபது தமிழ் வருடப் பெயர்களாகக் குறிப்பிடப்படும் பிரபவாதி ஆண்டுகளின் பெயர்களோ தமிழ் மரபைச் சார்ந்தவையல்ல என்று முடிவு செய்யப்பட்டதாகத் தெரிகிறது.

சங்க இலக்கியங்களில் “தைந்நீராடல்’ எனப்பட்ட பாவை நோன்பு சிறப்பாகக் குறிப்பிடப்படுகிறது என்பது உண்மையே. ஆனால் அதனைச் சூரிய வழிபாட்டுடன் தொடர்புபடுத்துவதற்குரிய குறிப்போ, புத்தாண்டு தொடங்குகிறது என்று அனுமானிப்பதற்கு அடிப்படையான சூரியனின் வடக்கு நோக்கிய நகர்வு (உத்தராயனத் தொடக்கம்) தை மாதம் முதல் தேதியன்றுதான் நிகழ்கிறது என்பது பற்றிய குறிப்போ சங்க இலக்கியங்களில் காணப்படவில்லை. எனவே சங்க இலக்கியங்கள் குறிப்பிடும் தைந்நீராடலுக்கும் புத்தாண்டுப் பிறப்பிற்கும் தொடர்பில்லை என்பது வெளிப்படை.அவ்வாறாயின், தை மாதப் பிறப்பினைத் தமிழ்ப் புத்தாண்டாகத் தமிழறிஞர்கள் சிலர் முடிவு செய்ததற்கு என்ன அடிப்படை இருக்கக்கூடும் என யோசித்தால், ஆங்கில வருடப் பிறப்புக் காலமாகிய ஜனவரி மாதத்தினையொட்டித் தை மாதம் வருவதாலும், விக்ரம சகாப்தம், சாலிவாகன சகாப்தம் முதலியனவெல்லாம் காலாவதியாகிப் போய் ஐரோப்பிய சகாப்தம் – சொல்லப்போனால் கிறிஸ்துவ யுகம் – அகிலத்தையே ஆக்கிரமித்துவிட்டதாலும், அதற்கு ஒத்து வருகிற வகையில் நமது பழம் மரபுகளுக்குப் புதிய விளக்கமளிக்கிற ஓர் ஒத்திசைவே இதற்கு அடிப்படையாக இருந்திருக்க வேண்டும் எனத் தோன்றுகிறது.
இந்தச் சிந்தனைப் போக்கு, 16ஆம் நூற்றாண்டிலேயே தொடங்கிவிட்டதெனத் தெரிகிறது. தமிழில் வெளிவந்த முதல் அச்சு நூலான தம்பிரான் வணக்கத்தில், கிறிஸ்துவ அப்தம் 1578ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 20ஆம் தேதி அன்று அச்சிடப்பட்டதாகப் போர்ச்சுக்கீசிய மொழியிலும், அற்பிகை மாதம் 20ஆம் தேதி அச்சிடப்பட்டதாகத் தமிழிலும் குறிப்பிடப்பட்டுள்ளன. அக்டோபர் மாதத்துக்கு நேரான தமிழ் மாதம் அற்பிகை (ஐப்பசி) எனக் கருதப்பட்டுள்ளது.

கி.பி. 18ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழகத்தில் சமயப் பணிபுரிந்த இத்தாலி நாட்டைச் சேர்ந்த கத்தோலிக்கத் துறவியான வீரமாமுனிவர், தமது தேம்பாவணியில் (மகவருள் படலம், பா. 96) ஏசுநாதர் மார்கழி 25ஆம் தேதியன்று பிறந்தார் எனக் குறிப்பிடுகிறார். ஐரோப்பியக் காலண்டர் மாதங்களையும் தமிழ் மாதங்களையும் ஒன்றுபடுத்திப் பார்க்கும் போக்கின் தொடர்ச்சியாகவும், தைத்திங்களில் தமிழ்ப் புத்தாண்டு தொடங்குவதாகக் கருதும் மனப்போக்கின் ஆரம்பமாகவும் இதனைக் கருதலாம்.
2000 ஆண்டுகளுக்கு முன்பு கிரேக்கர்கள் Spring எனப்படும் வசந்த காலத்தைத்தான் புத்தாண்டுத் தொடக்கமாகக் கருதினர். கிரேக்க ரோமானிய நாகரிகங்களில், மார்ச் மாதம் முதல் நாளன்று வசந்த காலம் தொடங்குவதன் அறிகுறியாக ஒருவர் மேல் ஒருவர் சாய நீரைத் தெளித்துக் கொண்டும் குறும்புகள் செய்தும் சிரித்து விளையாடியும் மகிழ்வர். மேலைநாடுகளில் உறைய வைக்கும் குளிர்காலம் முடிந்து வெயிற்காலம் தோன்றுவது மிகவும் மகிழ்ச்சியுடன் வரவேற்கப்பட்டது. வணிகர்களும் அரசாங்கமும் தமது வரவு செலவுக் கணக்கை அன்றுதான் தொடங்குவர். இம்மரபுகள்தாம், ஏப்ரல் மாதம் முதல் நாளுக்கு மாற்றப்பட்டுத் தற்போது உலகளவில் பின்பற்றப்படுகின்றன. இவ்வாறு மாற்றப்பட்டதற்குப் பல காரணங்கள் உள்ளன.
கிரேக்கக் காலக் கணக்கீட்டின்படி, செவ்வாய்க் கிரகத்தை அதிபதியாகக் கொண்ட “ஏரீஸ்’ வீட்டில் சூரியன் இருக்கின்ற மாதமே மார்ச் மாதமாகும். ரோமானிய (லத்தீன்) காலக் கணக்கீட்டின்படி, ஏரீஸ் எனப்படும் முதல் மாதம், மார்ச் 21ஆம் தேதி முதல் ஏப்ரல் 20ஆம் தேதி வரையிலும் நீடிக்கும். பிசஸ் எனப்படும் இறுதி மாதம், மார்ச் 20ஆம் தேதி முடிவடையும்.

இந்திய ஜோதிட அறிவியலில் பூர்ணிமாந்தக் கணக்கீட்டின்படி, மாசி மகத்துடன் முடிவடையும் மாசி மாதத்துக்குப் பின்னர் பங்குனி மாதம், மார்ச் 14 தேதியளவில் பிறக்கும். பாரசீக சமயமான ஜெராஸ்ட்ரிய சமய நூல்களில் மாசி மாதம் (பிர்தௌஸ்) என்பதே ஓர் ஆண்டின் இறுதி மாதமாகும். இவ்வாறு பங்குனி – சித்திரை ஆகிய மாதங்களுள் ஒன்றே, அவ்வப் பிரதேச வேறுபாடுகளுக்கேற்ப ஆண்டின் தொடக்க மாதமாகக் கருதப்பட்டுள்ளது. காலக்கணக்கீட்டில் மீன (பங்குனி) மாதமும், மேஷ (சித்திரை) மாதமுமே முதன்மை பெற்று வந்துள்ளன என்பது “”மீன மேஷம் பார்த்தல்” என்ற பேச்சு வழக்காலும் தெளிவாகும்.
இப்போது தை மாதத்தைத் தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கமாகக் கொள்வதற்குச் சங்க காலத் தமிழ் இலக்கியங்களில் மறைமுகமாகவாகிலும் ஏதேனும் குறிப்பு காணப்படுகிறதா?

கி.பி. 7ஆம் நூற்றாண்டில் தொடங்கிய பக்தி இலக்கியக் காலகட்டத்தில் மார்கழி நீராடல் நோன்பாகப் பரிணமித்த தை மாதப் பாவை நோன்புக்கும், உழவர் திருநாளாகக் கருதிக் கொண்டாடப்படுகின்ற பொங்கல் திருநாளுக்கும் இடையே உள்ள தொடர்பு என்ன என்று நாம் புரிந்துகொள்வது அவசியம்.

மார்கழி நீராடல் மரபு வைணவ சம்பிரதாயத்தில் கண்ணன் வழிபாட்டோடு தொடர்புபடுத்தி முதன்மைப்படுத்தப்படுகிறது. மார்கழி நீராடல் மரபில் கண்ணனுடைய அண்ணனாகிய பலராமனுக்கும் ஓர் இடம் உண்டு. பலராமன் சங்க இலக்கியங்களில் வாலியோன் (வெள்ளையன்) என்ற பெயரில் குறிப்பிடப்படுகிறான். அவனுடைய ஆயுதம் ஏர்க்கலப்பை ஆகும். (“”நாஞ்சிற்பனைக் கொடியோன்” – புறநானூறு 56:4) அதாவது அவனே சங்ககால விவசாயக் கடவுள் ஆவான்.

பலராமனை “புஜங்கம புரஸ்ஸர போகி’ எனக் கி.பி. 9ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பராந்தக வீர நாராயண பாண்டிய மன்னனின் தளவாய்புரச் செப்பேடு’ குறிப்பிடுகிறது. எனவே, போகிப் பண்டிகை என நாம் குறிப்பிடுவது பலராமனுக்கு உரிய விழாவே தவிர பரவலாகக் கருதப்படுவது போல இந்திரனுக்கு உரிய விழா அன்று. இந்திர விழா சித்திரை மாதப் பூர்ணிமையன்று நிகழ்ந்தது என்பது சிலப்பதிகாரத்தில் தெளிவுபடக் குறிப்பிடப்படுகிறது. எனவே, மார்கழித் திங்களின் இறுதி நாளன்று கொண்டாடப்படும் போகிப் பண்டிகை விவசாயக் கடவுளான பலராமனுக்கு உரிய விழாவே.

பூம்புகாரில் இந்திர விழாவின்போது “”சித்திரைச் சித்திரைத் திங்கள் சேர்ந்தெனக் காவற் பூதத்துக் கடை கெழு பீடிகை புழுக்கலும் நோலையும் விழுக்குடை மடையும் பூவும் புகையும் பொங்கலும் சொரிந்து” மூதிற் பெண்டிர் வழிபட்டனர் எனச் சிலப்பதிகாரம், இந்திர விழவூரெடுத்த காதை வரி 64 – 69களில் குறிப்பிடப்படுகிறது.

பிற்காலச் சோழராட்சியின்போது தைப் பொங்கல் விழா என்பது தமிழர் திருநாளாகக் கருதப்பட்டதா; தமிழ்ப் புத்தாண்டு என்பது தைப் பொங்கலன்று தொடங்கிற்றா? இவை இரண்டிற்குமே தெளிவான விடை “”அல்ல” என்பதுதான்.

சூரியன் தட்சிணாயனத்திலிருந்து உத்தராயனத்திற்குத் திரும்புகின்ற நாள் என்ற காலக்கணக்கீட்டின் அடிப்படையில் தை மாதம் முதல் தேதிக்கு முக்கியத்துவம் வழங்கப்படுவது பிற்காலச் சோழர் ஆட்சியில் நடைமுறைக்கு வந்துவிட்டது என்பது உண்மையே.

ஆட்டைவட்டம் எனப்படும் ஓர் ஆண்டின் சுழற்சியை – 360 பாகைகளை – 90 பாகைகள் கொண்ட நான்கு பிரிவுகளாகப் பிரித்து, சித்திரை விஷு, தக்ஷிண அயனம், ஐப்பசி விஷு, உத்தர அயனம் எனக் குறிப்பிடும் வழக்கம், கி.பி. 998ஆம் ஆண்டைச் சேர்ந்த தஞ்சை மாவட்டம் திருவலஞ்சுழி சேத்ரபால தேவர் கோயிற் கல்வெட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் இந்நாள் புத்தாண்டுத் தொடக்கமாகவோ தமிழர்க்கு மட்டுமேயுரிய திருநாளாகவோ கருதப்படவில்லை.

சூரிய குலத்தைச் சேர்ந்தவர்களாகச் சொல்லப்படும் சோழர்களின் ஆட்சியில் முதன்மையான நிர்வாகப் பதவியை வகித்த சேக்கிழார் நாக தெய்வத்தைத் தமது குல தெய்வமாகக் கொண்டவர் ஆவார். அப்படி இருக்க சேக்கிழார் தம் பெரிய புராணத்தில் ஓரிடத்தில்கூடத் தைப் பொங்கல் விழாவை முதன்மைப்படுத்தியோ, தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சைப் பகுதியின் உழவர்கள் கொண்டாடிய முதன்மையான ஒரு விழாவாகவோ குறிப்பிடவில்லை என்பது எண்ணிப் பார்க்கத்தக்கது.
சோழ நாட்டு மள்ளர்களைக் (பள்ளர்களை) குறிப்பிடுகையில் “”இழுது செய்யினுள் இந்திரத் தெய்வதம் தொழுது நாற்று நடுவார் தொகுதியே பழுதில் காவிரி நாட்டின் பரப்பெல்லாம்” என்றே சேக்கிழார் வருணிக்கிறார். (திருத்தொண்டர் புராணம், திருநாட்டுச் சிறப்பு, பா. 10, 12).
தமிழக வரலாற்றில் மருத நில உழவர்களான தேவேந்திர குல மள்ளர்களின் இடத்தையும், மழைக் கடவுளாகிய இந்திரனுக்குரிய இடத்தையும், நிர்ணயிக்க உதவும் பல குறிப்புகளுள் இதுவும் ஒன்றாகும். இங்கும் வேளாண்மை தொடர்பான விழாவாகத் தைப் பொங்கலோ, வேளாண்மைக்குரிய கடவுளாக பலதேவனோ முதன்மைப்படுத்தப்படவில்லை.பிற்காலச் சோழர்களின் ஆட்சிக்காலத்தில்கூட இந்திர விழாவைவிட பலராமன் விழாவாகிய போகி – பொங்கல் விழா முதன்மை பெற்றுவிடவில்லை என்பது தெளிவாகத் தெரிய வருகிறது. பூம்புகாரில் சித்திரைத் திங்களில் இந்திர விழா கொண்டாடப்பட்டதைப் பற்றிய இலக்கியச் செய்திகளின் அடிப்படையில் பார்த்தாலும் தேவர்களின் தலைவனாகிய இந்திரனுக்கு ஆண்டின் தொடக்க காலத்தில் விழா எடுக்கின்ற மரபு நீண்ட நெடுங்காலமாகச் சோழ நாட்டில் தொடர்ந்து வந்திருக்கின்றது என்பதும் பலராமன் விழாவாகிய தைப்பொங்கலைவிட இந்திர விழா பழைமையானது என்பதும் புலனாகின்றன.

பருவங்களின் தலைவன் பிரஜாபதி என வேதங்கள் கூறுகின்றன. மகாபிரஜாபதி என இந்திரனைக் குறிப்பிடுவர். எனவேதான், பருவங்களின் தலைமைப் பருவம் தொடங்கும் சித்திரை மாதத்தில் இந்திரவிழா கொண்டாடப்பட்டிருக்க வேண்டும். மருத நிலத்தின் தெய்வமாக இந்திரனையும், அந்நிலத்துக்குரிய பெரும் பொழுதாக இளவேனில் பருவத்தையும் குறிப்பிடுவதே தமிழிலக்கிய மரபாகும்.
வரலாற்று உண்மைகளிலிருந்து நாம் சற்று கவனத்தைத் திருப்பிப் பருவங்களின் சுழற்சியை அடிப்படையாகக் கொண்ட இயற்கையின் காலக்கணக்கீட்டுக்கு வருவோம்.

“”திண்ணிலை மருப்பின் ஆடு தலையாக விண்ணூர்பு திரிதரும் வீங்கு செலல் மண்டிலம்” என்பது சங்க இலக்கியமாகிய நெடுநல்வாடையில் இடம்பெறும் தொடராகும். (வரி 160 – 161) மேஷ ராசியே தலையான (முதல்) ராசி என்பது இதன் பொருள். மேஷ ராசியில் சூரியன் பிரவேசிக்கின்ற மாதத் தொடக்கமே புத்தாண்டின் தொடக்கமாகும். ரோமானிய நாகரிகத்தில் முதல் மாதமாகக் கருதப்பட்ட “ஏரீஸ்’ என்பது ஆடு (மேஷம்) என்றே பொருள்படும்.
இக்ஷ்வாகு மன்னர்களின் கி.பி. 3 – 4ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டுகளில் கிம்ஹ (கிரீஷ்ம), வஸ்ஸ (வர்ஷ), சரத் என்ற மூன்று காலங்கள் குறிப்பிடப்படுகின்றன. அதாவது கோடை, மழை, பனிக் காலங்களே இவ்வாறு குறிப்பிடப்பட்டன. இந்த வரிசையே தமிழ் இலக்கண மரபிலும் இளவேனில் – முதுவேனில், கார் – கூதிர், முன்பனி – பின்பனி என்று சற்று விரிவாகக் குறிப்பிடப்படுகிறது. எனவே வானநூல் – ஜோதிட அடிப்படையிலும் கோடைக்காலமே ஆண்டின் தொடக்கமாகும்.

சீவக சிந்தாமணியில் முக்தியிலம்பகத்தில் (3070 – 72) சீவகன் ஓராண்டுக் காலம் தவம் செய்தது வர்ணிக்கப்படுகிறது. நந்நான்கு மாதங்கள் கொண்ட மூன்று பருவங்களாக, “”தீயுமிழ் திங்கள் நான்கு, வானம் நீர்த்திரள் சொரிந்திடு திங்கள் நான்கு, பனிவரை உருவி வீசும் மங்குல் சூழ் வாடை நான்காய திங்கள்” என ஓராண்டுக்காலம் குறிப்பிடப்படுகிறது. இங்கெல்லாம் கோடைக்காலமே முதலாவது பருவமாகக் குறிப்பிடப்படுவதைக் கவனிக்க வேண்டும்.

இனி, 60 ஆண்டுக் கணக்கீட்டினைப் பற்றி ஆராய்வோம். தமிழ் வருடப் பெயர்கள் எனக் குறிப்பிடப்படும் “”பிரபவ” தொடக்கமாக அமைகிற 60 பெயர்களும் தமிழ்ப் பெயர்கள் அல்ல என்பது உண்மையே. 60 ஆண்டுகள் கொண்ட பிரபவாதி சுழற்சிமுறை “”வியாழ வட்டம்” (Jovian Circle) எனப்படும். 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை தனது பழைய இடத்துக்கு வருகிற குருவும் 30 ஆண்டுகளுக்கு ஒருமுறை தனது பழைய இடத்துக்கு வருகிற சனியும், ஒரே நேரத்தில் தாம்தாமிருந்த பழைய இடங்களுக்கே வருவது 60 ஆண்டுக்கு ஒருமுறைதான் நிகழும். எனவேதான் 60 ஆண்டுச் சுழற்சி முறை முதன்மை பெறுகிறது. ஆயினும் இந்த வியாழ வட்டத்திற்கும் சித்திரை மாதத்தில் புத்தாண்டு பிறப்பதற்கும் அடிப்படையான தொடர்பு ஏதுமில்லை.
சித்திரை மாதத்தில் புத்தாண்டு தொடங்குவது என்பது வானநூலையும் பருவங்களின் சுழற்சியையும் அடிப்படையாகக் கொண்டது. எனவே, பருவங்களின் சுழற்சியை அடிப்படையாகக் கொண்டு இயற்கையை ஒட்டி, சித்திரை மாதத்தைத் தொடக்க மாதமாகக் கொண்டமைந்த ஆண்டுக் கணக்கீடுதான் பூர்விகத் தமிழ் மரபாகவும் இருக்க முடியும்.
கி.பி. 16ஆம் நூற்றாண்டில் போர்ச்சுகீசியரின் ஆதிக்கத்தைத் தொடர்ந்து ரோமன் கத்தோலிக்க சமயக் கண்ணோட்டத்தில் ஏசுநாதர் பிறந்த கேப்ரிகார்ன் (மகர) மாதம் முதன்மைப்படுத்தப்பட்டு, ஜனவரியே கிறிஸ்து சகாப்தத்தின் முதல் மாதம் என்ற நிலை உருவாகிவிட்டது. 16ஆம் நூற்றாண்டுக்குப் பின் நிகழ்ந்த ஐரோப்பியக் காலனி ஆதிக்கம், “இனம் புரிந்த’, இனம் புரியாத வகைகளிலெல்லாம் இந்தியச் சிந்தனையாளர் வர்க்கத்தை ஈர்த்து அடிமைப்படுத்திற்று. அதன் விளைவாக ஐரோப்பியர்கள் கைகாட்டுகிற திசையில் தமது தனித்த அடையாளத்தைத் தேடிக் காண்கிற முயற்சிகள் தொடங்கின.

இந்தியா “”தாழ்வுற்று வறுமை மிஞ்சி விடுதலை தவறிக் கெட்டுப் பாழ்பட்டு நின்ற” காலகட்டத்தில், “”நேரங் கெட்ட நேரத்தில்” மேற்கொள்ளப்பட்ட காலங்கள் பற்றிய கணக்கீட்டில் “”தை மாதம்தான் தமிழர்களின் புத்தாண்டுப் பிறப்பு” என்ற தவறான முடிவு விடையாகக் கிடைத்ததில் வியப்பில்லை. சார்பு நிலையால் ஏற்படும் மனமயக்கங்களில் ஆழ்ந்துவிடாமல் “சுதந்திர’மாக ஆராய்ந்தால் கிடைக்கும் விடை: “”சித்திரையில்தான் புத்தாண்டு”.

(கட்டுரையாளர்: தொல்லியல் ஆராய்ச்சியாளர்)

Wednesday, November 17, 2010

Lemuria and Kumari Kandam

Lemuria and Kumari Kandam

DR. N. MAHALINGAM
SHARE · PRINT · T+

The Hindu Dr. N. Mahalingam
RELATED
TOPICS
arts, culture and entertainment
language

language
Tamil

arts, culture and entertainment

We are all aware that the origin of the Tamil people and their culture is shrouded in deep mystery. Though there are many traditions narrated in early literature, “Kumari Kandam”, the land that lay to the south of India and, which later submerged in the Indian Ocean, has been a matter of conjecture for a study by scholars.

Two American eminent geologists McKenzie and Sclater have clearly explained that Africa and South America were locked together as part of the primitive continent until about 200 million years ago.

The present formations of India, Arabia, Africa, Antarctica, South America and Australia started breaking up due to natural upheavals and moving to different parts of the earth at the rate of 15,000 years per mile on an average and found their places in the Asian Continent. The movement of the earth mass, called Navalam Theevu in Tamil, caused the formation of the present continent of India.

There was a general belief that both Lemuria and Kumari Kandam were one and the same. However, it has been established by Frank Joseph, Secretary for Ancient American Association, in his book “The Lost Civilization of Lemuria”, the existence of a land called Lemuria, one of the world's oldest civilizations, about 2.5 lakh years ago, in Indonesia. Hence, Lemuria and Kumari Kandam, which existed in southern part of India, are different lands.

Mr. Joseph has also established that the Mohenjodaro letters of Eastern Islands are nearly 1,00,000 years old. He has critically examined the views of various scholars and established the source of Mohenjodaro letters as well as the ancient civilization of Moo and has written that due to natural calamities, the island of Moo was destroyed about 2.5 lakh years ago.

Eastern Island, 1,000 miles near Japan, has a script called Rongo Rongo and it is identical with Mohenjodaro letters. This has been fixed as 1,00,000 years old.

From the Island of Moo called Lemuria, which was located near Indonesia about 2.5 lakhs years ago, people regularly moved out to Atlantis in Mexican Sea and Kumari Kandam in South Tamil Nadu, about 1,00,000 years ago due to tsunami. These letters are the script of Moo civilization, which was well developed.

From Atlantis, due to tsunami, the Moo people moved to South America and became Aztecs and Incas. Those who moved to North America became Mexicans and Red Indians.

From Kumari Kandam, South of Tamil Nadu, about 15,000 years ago people moved to Africa and became Sumerians and those who moved from Africa to Arabia later became Jews.

From Kumari Kandam, South of Tamil Nadu due to tsunami, people moved to Bengal and became Cholas and those who moved to Sind and Punjab became Cheras.

In Sillapathikaram, it was mentioned that one “Ezhuthanga Nadu” (7x7 =49 countries) existed. So, Southern Tamil Nadu and Kumari Kandam are different regions. Those who have moved to Southern Tamil Nadu were called Pandiyas and they spread over Ceylon and Tirunelvelli.

Tamil literatures say that during the Kurukshethra war, Chera Kings had given food to both the armies. From all these we come to a conclusion that the Ancient South India would have been with tall cliffs, dense forests with high fertility.

Because of a calamity, which took place in 9,000 BC, a terrific destruction occurred and destroyed Chera, Chola and Pandiya Kingdoms and they all then came and settled in South India. The great scholar Sri Avvai Duraisamy Pillai has established that the “Pancha Dravidam” is the region consisting Gujarath, Maharashtra, Andhra, Kerala, Karnataka and Tamil Nadu.

This is the time to write the correct history of Tamil Nadu. In “Irayanar Agapporul” (Nakkeerar Urai) it is mentioned that 72 Pandiya Kings had ruled Tamil Nadu (which was inclusive of the destroyed Kumari Kandam) from 30,000 B.C. to 16,000 B.C. (i.e. for 14,000 years).

Our universities have to undertake the responsibility to arrive at the correct history of Tamil Nadu.

Research has not been done so far to assess correctly the shape and appearance of Tamil letters. Today in Tamil, three ‘La', two ‘Ra' and three ‘Na' exist. These exist in ‘Grantha' also. But in ‘Naagari', which got birth in 500 A.C., there are only one ‘La', one ‘Ra', and two ‘Na'.

M. Sundarraj, retired Financial Controller of Integral Coach Factory, who did extensive research on Rig Vedas, has written a book titled “Rig Vedic Studies”. He has explained that our Rig Vedic Mythology is the ancient one in the world. The Rig Vedic Myths are symbolic expressions of astronomical phenomena, both of lunar asterisms and solar movements.

The Rig Veda calendar was essentially a luni-solar one, the lunar aspects being considered as important for holy purposes, but the solar movements which determined the seasons, were also of importance to Rig Vedic people.

The Rig Veda has already adopted a system of grouping together the stars in the lunar zodiac in the pictorial form, such as that of a bull, scorpion, eagle etc.

The origin of the concept of constellational groupings in pictorial forms can be traced in Rig Veda.

According to N.P.Ramadurai, an astronomy researcher, the cycle of time referring to 24,320 human years is mentioned in the Rig Veda at about 50 places. But to read Rig Veda, ‘Grantha' is essential.

Also to read and grasp clearly our ‘Sangam literature' ‘Grantha' knowledge is necessary. If we thoughtfully and magnanimously accept that our old Tamil letters are ‘Grantha' letters, it will pave the way to realise our ancient civilization.

Also, to read philosophy, art, sculpture, medicine etc., ‘Grantha' will be useful. It is necessary at this stage to do intensive research on the Mohenjodaro letters and our ancient languages, Sanskrit and Tamil, and, other Indian languages, to ascertain as to how the script changed over a time and new languages evolved.

In India, Tamil and Sankrit are the oldest languages and both are origin of other languages. This fact is proved by Vedas and our Tamil Sangam Literature. Great Saint Arunagiri Nadhar says in his Thirupugazh that Tamil has 51 ‘Atcharams'. Similarly, the total number of ‘Grantha' letters is 51.

To get back the history of more than three lakh years in the past, Saptharishi calendar only will be able to provide proper and genuine assistance.

We have been able to fix the dates of history from 25th Chathur Yuga to 28th Chathur Yuga. Saptharishi Mandala has played an important role in almost all the ancient civilization of the world. It is the pivotal point of all astronomical calculations and observations.

N.P.Ramadurai, with my assistance, has found and established that the Saptha Rishi Mandala takes only 2,187 years to make one complete circle through all the 27 asterisms.

He was able to establish that Chathur Yuga comprises only 12,160 years.

I conclude with a request to all the great Tamil scholars, eminent astronomers and mathematical experts to join together in this noble research to establish the glory of Tamil language and Tamil race to the whole world.

Keywords: World Classical Tamil Conference, Coimbatore

E