வரி ஏய்ப்பில் ஈடுபடுபவர்கள் குறித்து தகவல் அளித்தால் வரியில் 20 சதவீதம் கமிஷன் வழங்கும் புதிய திட்டத்தை அரசு அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய திட்டத்தின் மூலம் அரசின் வருமானம் அதிகரிக்கும் என மத்திய இணையமைச்சர் பழனி மாணிக்கம் தெரிவித்துள்ளார். சுங்க வரி, சேவை வரி உள்ளிட்ட மறைமுக வரிகளின் மூலம் ஏய்ப்பு செய்பவர்கள் குறித்து தகவல் அளித்தால் வரி வசூலில் 20 சதவீதமும், வருமான வரி, கார்ப்பரேட் வரி ஏய்ப்பு குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு 10 சதவீதமும் கமிஷன் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.வேலையில்லா இளைஞர்களுக்கு புதிய வடிவிலான பிணையில்லா கடன் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பாரத பிரதமரின் வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ், 25 லட்ச ரூபாய் வரை கடன் வழங்கப்பட்டு வருகிறது. இதில் சிறிய அளவிலான உற்பத்தி சார்ந்த தொழில்கள், வியாபாரம், சேவை சார்ந்த தொழில்களுக்கு கடன் பெற முடியாத நிலை உள்ளது. இதனால் சிறிய அளவில் தொழில் துவங்க முன் வரும் இளைஞர்களும், வியாபாரம், சேவை போன்றவற்றில் ஈடுபட விரும்பும் இளைஞர்களும் வாய்ப்பை இழந்தனர். இக்குறையை போக்கும் வகையில் மத்திய அரசு வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு உருவாக்கு திட்டம் (யூ.ஒய்.இ.யூ.பி.,) என்ற புதிய திட்டம் கொண்டு வந்துள்ளது.இத்திட்டத்தின் கீழ் வேலையில்லா இளைஞர்களுக்கு, ஐந்து லட்ச ரூபாய் வரை புதிய தொழில் துவங்க பிணையில்லா கடன் வழங்கப்படுகிறது.
திட்ட மதிப்பீட்டில் 15 சதவீதம் அரசு மானியமாக வழங்குகிறது.கடன் பெறுவோர் 5 முதல் 10 சதவீதம் வரை தங்கள் பங்களிப்பாக நிதி செலுத்த வேண்டும். 18 வயதுக்கு மேற்பட்ட, ஆண்டு வருமான 1.50 லட்சத்திற்கு குறைவாக உள்ளவர்கள் கடன் பெற தகுதியானவர்கள். நேரடி விவசாயம் தவிர தொழில், உற்பத்தி தொழில், வியாபாரம், சேவை தொழில்களுக்கும் இத்திட்டத்தில் கடன் பெறலாம்.திட்ட அறிக்கை தயாரித்து மாவட்ட தொழில் மையத்தில் விண்ணப்பிக்க வேண்டும். மாவட்ட தொழில் மையம் பரிந்துரையின் பேரில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் கடன் வழங்கப்படும்.
No comments:
Post a Comment